tamilnadu

தீக்கதிர் விரைவு செய்திகள்

நிலநடுக்கத்தால் பாதிக்  கப்பட்டுள்ள ஆப்கா னிஸ்தானுக்கு இந்தியா அனுப்பிவைத்த நிவா ரணப் பொருட்கள் அடங்  கிய இரண்டாவது தொகுப்பு அந்நாட்டு தலைநகர் காபூலை ஜூன்  24 வெள்ளியன்று சென்ற டைந்தது.

தமிழகத்தில் ஐடிஐ படிப்பு களில் சேருவதற்கு ஜூன்  24 முதல் விண்ணப்பிக்க லாம் என்று அரசு தெரி வித்துள்ளது. http://skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் இதற்கான விவரங்களை அறிந்து கொள்ளலாம்.

சென்னையில் அடுத்த  மாதம் 4ஆம் தேதி சர்வ தேச முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறுகிறது.

நிதி ஆயோக் தலைமை செயல் அலுவலராக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி  பரமேஸ்வரன் ஐயரை ஒன்றிய அரசு நியமித் துள்ளது. அவர் இரண்டு வருட காலத்திற்கு அல் லது அடுத்த உத்தரவு வரை பதவியில் இருப்பார்.

மாமூல் வாங்கும் போலீசா ருக்கு எதிராக ஒழுங்கு நட வடிக்கை மட்டுமல்லா மல், குற்றவியல் நடவ டிக்கையும் எடுக்க வேண் டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.

திருச்சி பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்க ரூ. 350 கோடி விடுவித்து  தமிழ்நாடு அரசு அர சாணை வெளியிட்டுள் ளது. பேருந்து நிலைய பணிகள் 2 கட்டமாக மேற்கொள்ளப்பட்டு, ஒரு வருடத்திற்குள் மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என தகவல்.

உடனடி மற்றும் உறுதி யான நடவடிக்கைகளால் மட்டுமே மோசமாகி வரும் சோமாலியா நாட்டின் பஞ்  சத்தை முடிவுக்கு கொண்டு வர முடியும் என்று ஐக்கிய நாடுகள் அவை தெரிவித் துள்ளது.

;