tamilnadu

img

சித்தாந்த மோதல்

- வல்லம் தாஜுபால்

இது இந்திய நாடு என்பது
ஒரு சித்தாந்தம்
இந்துத்வ நாடு என்பது
இன்னொரு சித்தாந்தம்

இது மதசார்பற்ற நாடாக
நீடிக்க வேண்டும் என்பது
ஒரு சித்தாந்தம்
இது மதசார்புள்ள நாடாக
மாற வேண்டும் என்பது
இன்னொரு சித்தாந்தம்

கல்விச் சாலைகளில்
விஞ்ஞானம் கற்பிக்க வேண்டும் 
    என்பது ஒரு சித்தாந்தம்
வேதங்கள் கற்பிக்க வேண்டும்
என்பது இன்னொரு சித்தாந்தம்

எல்லோர் கையிலும்
நூலைக் கொடுப்பது
ஒரு சித்தாந்தம்
வேலைக் கொடுப்பது
இன்னொரு சித்தாந்தம்

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் 
    என்பது ஒரு சித்தாந்தம்
பிறப்பிலே உயர்வு தாழ்வு கற்பிப்பது
     இன்னொரு சித்தாந்தம்

சமதர்மம் வேண்டும் என்பது
ஒரு சித்தாந்தம்
மனுதர்மம் வேண்டும் என்பது
இன்னொரு சித்தாந்தம்

மக்களை இணைப்பது
ஒரு சித்தாந்தம்
மக்களைப் பிளப்பது
இன்னொரு சித்தாந்தம்

வேற்றுமையில் ஒற்றுமை காணும்
ஒரு சித்தாந்தம்
ஒற்றுமையில் வேற்றுமை காணும்
இன்னொரு சித்தாந்தம்

பன்முகப் பண்பாடு
ஒரு சித்தாந்தம்
ஒற்றைக் கலாச்சாரம்
இன்னொரு சித்தாந்தம்

எல்லோருக்கும் எல்லாமும்
கிடைக்க வேண்டும் என்பது
ஒரு சித்தாந்தம்
எல்லோருக்கும் எல்லாமும்
கிடைக்கக் கூடாது என்பது
இன்னொரு சித்தாந்தம்

சமூக நீதியை ஆதரிப்பது
ஒரு சித்தாந்தம்
சமூக நீதியை எதிர்ப்பது
இன்னொரு சித்தாந்தம்

அவரவர் தாய் மொழிக்கு
உரிய மதிப்பு 
    என்பது ஒரு சித்தாந்தம். 
சமஸ்கிருதத்திற்கு மட்டுமே
முதல் மரியாதை என்பது 
    இன்னொரு சித்தாந்தம்.

பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் 
    அவரவர் கருமமே             கட்டளைக்கல்
என்பது ஒரு சித்தாந்தம்
தலைவிதி ஊழ்வினை
நாள் நட்சத்திரம்தான் காரணம்
என்பது இன்னொரு சித்தாந்தம்.

இட ஒதுக்கீட்டுக்கு வழி செய்த
மண்டல் ஆதரவு ஒரு சித்தாந்தம்
இட ஒதுக்கீட்டுக்கு எதிரான
கமண்டல் ஆதரவு
இன்னொரு சித்தாந்தம்

காந்திதான் தேசப் பிதா
என்பது ஒரு சித்தாந்தம்
கோட்சே தான் தேசப் பிதா
என்பது இன்னொரு சித்தாந்தம்.

நேச உணர்வை வளர்ப்பது
ஒரு சித்தாந்தம்
வெறுப்பு உணர்வை வளர்ப்பது 
இன்னொரு சித்தாந்தம்.

ஒன்று மார்க்சிய சித்தாந்தம்
இன்னொன்று சாவர்க்கர் சித்தாந்தம்

இரு சித்தாந்தங்கள்
மோதக் காண்கிறது இத்தேசம்
நீங்கள்
எந்தப் பக்கம் நிற்பதாய் உத்தேசம்?