tamilnadu

img

உலகம் உன்னை ஏற்குமே...! - சின்ன மணல்மேடு த.இராமலிங்கம்

அம்மா சொன்னா  கேட்கணும்
அப்பா சொல்லை  மதிக்கணும்
தம்பி தங்கை தாங்கணும்
தமிழும் உயிரில் ஓங்கணும்

ஆசி  ரியரைப் போற்றணும்
அவர் சொல் கேட்டு நடக்கணும்
மாசில் லாரை வணங்கணும்
மனதில் தூய்மை தாங்கணும்

உண்மை நாளும் பேசணும்
உலகத் தையே கற்கணும்
நன்மை செய்ய முந்தணும்
நல்ல நண்பர் தேடணும்

ஏழைக் காக உள்ளணும்
எளிமை வாழ்க்கை வாழணும்
கோழை நெஞ்சைத் தள்ளணும்
கூடி மகிழ்ந்து வாழணும்

ஓடி ஓடி உழைக்கணும்
உதவி தன்னை நினைக்கணும்
தேடிப் பொருளை ஈட்டணும்
தெளிந்து வறியர்க் காக்கணும்

நல்ல நல்ல பண்புகள் 
நாட்டில் நிரம்ப உள்ளன
உள்ளம் அவற்றை ஏற்றிடின்
உலகம் உன்னை ஏற்குமே!