tamilnadu

புதுச்சேரியில் 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அறிவிப்பு

புதுச்சேரி, ஜன.10- புதுச்சேரியில் 1 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு திங்க ளன்று முதல் விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை யாக புதுச்சேரியில் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு திங்களன்று முதல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்படுகிறது. புதுச்சேரி நகர மற்றும் கிராம பகுதியில் உள்ள அனைத்து தொடக்கப் பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளி களில் 9-ஆம் வகுப்பு வரை வகுப்புகள் மூடப்பட்டுள்ளன. எனினும், ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்து பணிகளை மேற்கொள்ள வேண்டுமென அம்மாநில கல்வித்துறை அறி வுறுத்தியதன் பேரில், ஆசிரியர்கள் பள்ளி களில் இருந்தபடியே ஆன்லைன் வகுப்பு களை எடுத்து வருகின்றனர். 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் கொரோ னா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி நேரடி வகுப்புகள் நடைபெறுகின்றன.