tamilnadu

img

லெனின் கூறிய பயிற்சிப் பள்ளியில் பயின்றவர் - ஜி.ராமகிருஷ்ணன்

தமிழ்நாடு மின்வாரியத்தில் தொழிலா ளியாகப் பணியாற்றி தொழிற்சங்கத் தில் உறுப்பினராகி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியில் இணைந்து 60 ஆண்டு களுக்கு மேலாக இயக்கப் பணியாற் றிய, இப்போதும் களப்பணியாற்றிக் கொண்டிருக்கிற தோழர்கள் பலர் உள்ளனர். அப்படிப்பட்ட அடிவேர்களில் ஒருவரான தோழர் எஸ். ஜெகதீசன் பங்களிப்பு மகத்தானது. “எஸ்.ஜே.” என்று தோழர்களால் பிரியத்துடன் அழைக்கப்படும் எஸ். ஜெகதீசன் கள்ளக்குறிச்சி மாவட்டம் காட்டெடையார் என்ற கிராமத்தில் ஒரு எளிய விவசாயக் குடும்பத்தில் 1939  ஆம் ஆண்டு பிறந்தார். தன்னுடைய சித்தப்பா பணியாற்றி வந்த திட்டக்குடி யில் பள்ளியிறுதி வகுப்பு (11ஆம் வகுப்பு) வரை படித்தார். 1956ஆம் ஆண்டு  விருத்தாச்சலத்தில் மின்வாரியத்தில் பதிவு பெறாத தற்காலிகத் தொழிலா ளியாக (என்.எம்.ஆர்.) வேலையில் சேர்ந்தார். அப்போது இவருக்கு தினக் கூலி 13 அணா (பழைய நாணய முறை யில் ஓரணா என்பது 6 பைசா. 16 அணா  என்பது 1 ரூபாய். தற்போதுள்ள பைசா  நாணயம் அமலுக்கு வந்தது 1957இல்). அன்றைய ‘தமிழ்நாடு மின்சார தொழிலாளர் சம்மேளனம்’ என்ற தொழிற் சங்க அமைப்பில் சேர்ந்து சில போராட்ட இயக்கங்களில் கலந்துகொண்டார் ஜெகதீசன். அதற்காக வாரிய நிர்வாகம் இவரை  திருமுட்டம், பண்ருட்டி, திரு வெண்ணெய்நல்லூர்,

விழுப்புரம் என்று  பல ஊர்களுக்கு இடமாற்றம் செய்து பழி வாங்கியது. பந்தாடுவதைப் போல் தொ டர்ச்சியாக இடமாற்றம் செய்யப்பட்டா லும் சங்கத்தில் தொடர்ச்சியாகச் செயல்படுவதில் உறுதியாக இருந்தார்.  விழுப்புரத்தில் பணியாற்றியபோது 1960 ஜனவரி 1ல் களத்  தொழிலாளி யாக (லஸ்கர்) நிரந்தரம் செய்யப்பட் டார். 1960களின் பிற்பகுதியில் ஜெகதீச னும் வாரியத்தின் வேறு பல தொழி லாளர்களும் சம்மேளனத்திலிருந்து விலகி மாவட்ட அளவில் புதிய தொழிற் சங்கத்தைப் பதிவு செய்தார்கள். இவ்வாறு தமிழகத்தில் 15 மாவட்டங்களில் தனித் தனியாக பதிவு செய்து அமைக்கப்பட்டி ருந்த  சங்கங்களை இணைத்து மாநில  அளவில்“தமிழ்நாடு மின்சார தொழிலா ளர் மத்திய அமைப்பு (COTEW)” உரு வாக்கப்பட்டது. அது சிஐடியு சங்கத்து டன் இணைக்கப்பட்டது.

இவ்வமைப்பு 1970 மே 30ல் தொடங் கப்பட்டபோது தலைவராக தோழர் சி. கோ விந்தராஜன், பொதுச் செயலாளராக தோழர் டி. ஜானகிராமன் தேர்வு செய்யப் பட்டனர். தென்னாற்காடு மாவட்டத் தலைவராக தோழர் கே. ஜானகிராமன், செயலாளராக தோழர் எஸ். ஜெகதீசன் தேர்வு செய்யப்பட்டார்கள். 1986 வரை  ஜெகதீசன் இப்பொறுப்பில் இருந்தார். மாநில அளவிலும், மாவட்ட அளவிலும்  இவ்வமைப்பு இப்போதும் போர்க்குண மிக்க தொழிற்சங்கமாக செயல்பட்டு வரு வதை அனைவரும் அறிவர்.

போராட்டக் களங்களில்

1977ஆம் ஆண்டு வாரிய நிர்வாகத் தோடு போனஸ் பேச்சுவார்த்தை நடை பெற்று வந்தது. தீபாவளி நெருங்கிய போதும் அரசின் பிடிவாதத்தால் சுமூக மான உடன்பாடு ஏற்படாத நிலையில்  மாநில அளவிலான வேலைநிறுத்தத்திற் கும் மறியல் போராட்டத்திற்கும் சங்கத்  தலைமை அறைகூவல் விடுத்தது. சக  தொழிலாளர்களைத் திரட்டி அந்தப் போராட்டத்தில் முனைப்புடன் பங்கேற் றார் ஜெகதீசன். அப்போராட்டத்தில் கலந்துகொண்டு அதிகமானவர்கள் கைதானது தென்னாற்காடு மாவட்டத் திலிருந்து என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தம் கைதான 4,400 தொழிலா ளர்களில் அன்றைய ஒரே மாவட்டமாக இருந்த தென்னாற்காட்டிலிருந்து மட்டும் கைதானவர்கள் 1,400 பேர். அந்தப் போராட்டத்தில் திமுக தலைமையிலான தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தைச் சார்ந்த தொழிலாளர்களும் கலந்து கொண்டனர். மற்ற சங்கங்கள் கலந்து கொள்ளவில்லை. கைது செய்யப்பட்டவர்கள் அனை வரையும் அரசு சிறையில் அடைத்தது. அன்று முதலமைச்சராக இருந்தவர் எம்.ஜி.ஆர். அவரை சிஐடியு மாநிலத் தலைவர்களில் ஒருவரான தோழர் வி.பி.  சிந்தன் சந்தித்து, கைது செய்யப்பட்ட வர்களை விடுதலை செய்ய  வலியுறுத்தி னார்.

“உங்களுடைய சிஐடியு சங்கத்தைச்  சார்ந்தவர்களை விடுதலை செய்கிறோம்; ஆனால், தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தை சார்ந்தவர்களை விடுதலை செய்ய முடியாது,” என முதலமைச்சர் கூறியிருக்கிறார். “விடுதலை செய்தால் எல்லோரையும் விடுதலை செய்யுங்கள்;  இல்லையென்றால் யாரை யுமே விடுதலை செய்ய வேண்டாம்; இதில்  பாகுபாடு காட்டக்கூடாது,” என்று உறுதி படக் கூறிவிட்டு வந்துவிட்டார் வி.பி.சிந்தன். கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் பத்து நாட்களுக்குப் பிறகு விடுதலை செய்யப்பட்டனர். விடுதலை செய்யப்பட்டாலும் மறியலில் கலந்து கொண்டு கைதான அனைவரும் தற்காலிக வேலை நீக்கம் செய்யப்பட்டனர். இப்படிப்  பழிவாங்கும் நடவடிக்கையை விலக்கிக்கொள்ள வேண்டுமெனக் கோரி மறுபடியும் போராட்டம் நடைபெற்றது. மூன்று மாதப்  போராட்டத்திற்குப் பிறகு தற்காலிக  வேலை நீக்க உத்தரவு விலக்கிக்கொள் ளப்பட்டது. அத்தோடு, சிறையில் அடைக் கப்பட்டிருந்த பத்து நாட்களுக்கான ஊதியமும் தொழிலாளர்களுக்கு வழங்கப் பட்டது. சங்கத்தின் இந்தப் போராட்ட நினைவலைகளை நெகிழ்ச்சியோடு பகிர்ந்தார் தோழர் எஸ்.ஜே.

ஒப்பந்தத் தொழிலாளர்களுக்காக..

மின்வாரியத்தில் பணியாற்றி வந்த 32,000 ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்தரமாக்கிட வலியுறுத்தி 1972 முதல்  தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய  அமைப்பு அனைத்து மாவட்டங்களிலும்  தொடர்ச்சியான போராட்ட நடவடிக்கை களை மேற்கொண்டது. வலுவான அந்தப் போராட்டத்தின் நிர்ப்பந்தத்தால் மாநில அரசு அனைவரையும் நிரந்தர மாக்கி அவர்களுக்கு கள உதவியாளர் (Helper) என்ற பொறுப்பளித்தது. தமிழ கம் முழுவதும் மின்வாரிய தொழிலாளர் களிடையே மத்திய அமைப்பின் மரி யாதை உயர்ந்தது; பலமானதொரு சங்க மாக அது வளர்ந்தது. அடுத்தடுத்து தமிழ்நாடு மின்வாரி யத்தில் நிரந்தரத் தன்மையுள்ள வேலை களில் ஒப்பந்தத் தொழிலாளர்களையே பணியமர்த்தியது நிர்வாகம். அவர்கள் அனைவரையும் நிரந்தரமாக்கிட வேண்டுமென்று மத்திய அமைப்பு தொ டர்ச்சியாக பல்வேறு களப் போராட்டங் களை நடத்தியது. வழக்கும் தொடுத்து நீதிமன்றப் போராட்டத்தையும் நடத்தியது.  வழக்கை விசாரித்த உச்சநீதி மன்றம் நீதிபதி வி. காலித் தலைமையில்  ஒருநபர் குழுவை அமைத்தது. விசார ணைகளையும் விவாதங்களையும் தொ டர்ந்து காலித் குழு 18006 ஒப்பந்த தொழி லாளர்களை படிப்படியாக நிரந்தரம் செய்ய வேண்டுமென அறிக்கை அளித் தது. அந்த பரிந்துரைப்படி சுமார் 15,000  ஒப்பந்தத் தொழிலாளர்கள் நிரந்தரமாக் கப்பட்டதை இப்போதுதான் நடந்ததைப் போல நினைவுகூர்கிறார் எஸ்.ஜே..

மத்திய அமைப்பு தொடக்கத்தி லிருந்து இன்று வரையில் ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்தரமாக்கிட உறுதியாகப் போராடி வருகிறது. நிரந்தரத் தொழிலாளர்களே களமிறங்கி நடத்திய அந்தப் போராட்டங்களின் பலனாக, 1972-90 வரையில் 32,000 தொழிலா ளர்களும், 1992-96 வரையில் (காலித் குழு) 15,046 தொழிலார்களும், 1998ல் அனல்மின் நிலையங்களில் 9,948 தொழிலாளர்களும், 2007ல் 21,600 தொழிலாளர்களும், 2012ல் 4,458 தொழிலாளர்களும் - மொத்தம் 83,052  ஒப்பந்தத் தொழிலாளர்கள் நிரந்தர மாக்கப்பட்டுள்ளனர். இதில் குறிப்பிடப்பட வேண்டிய மற்றொரு சிறப்பு - ஒப்பந்தத்  தொழிலாளர்களுக்காகத் தனிச் சங்கம் அமைக்காமல் நிரந்தரத் தொழிலாளர் களோடு அவர்களும் மத்திய அமைப்பி லேயே உறுப்பினர்களாக சேர்க்கப்படுவது. தொழிலாளர்களின் ஊதிய உயர்வு, அகவிலைப்படி பணிப் பாதுகாப்பு, பதவி உயர்வு, போனஸ் போன்ற கோரிக் கைகளுக்காக ஏராளமான இயக்கங்களை நடத்தி வருகிற தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநாடு கடலூரில் நடந்தது. அந்த மாநாட்டில் தோழர் வி.பி.  சிந்தன் தலைவராகவும், தோழர் டி. ஜானகிராமன் பொதுச்செயலாளராகவும் தேர்வு செய்யப்பட்டனர். மாநாட்டின் நிறைவாக நடந்த தொழிலாளர் பேரணி - பொதுக்கூட்டத்தில் அன்றைய சிஐடியு அகில இந்திய தலைவர் பி.டி. ரணதிவே கலந்து கொண்டு  உரையாற்றியதைப் பெருமையோடு குறிப்பிட்டார், மாநாட்டுப்  பணிகளில் முழுமூச்சுடன் ஈடுபட்டவரான  எஸ்.ஜே.

பயிற்சிப் பள்ளியில்

“தொழிற்சங்கம் புரட்சிக்கான பயிற்சிப் பள்ளி” என்ற லெனின் கூற்றுக் கிணங்க மின்வாரியத்தில் பணியாற்றிய, பல போராட்டங்களில் கலந்து கொண்ட ஏராளமான தோழர்கள் மாநில, மாவட்ட அளவிலான சிஐடியு அமைப்பிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலும் பல  பொறுப்புகளுக்கு தேர்வு செய்யப் பட்டார்கள். தோழர் எஸ். ஜே. மின்ன ரங்கப் பணியோடு நிறுத்திக்கொள்ளா மல் இதர வர்க்க / வெகுஜன அமைப்பு களின் வளர்ச்சிக்கும் உதவியாக இருந் துள்ளார். அனைத்திந்திய ஜனநாயக  மாதர் சங்கத்தின் 4வது மாநில மாநாடு  விருத்தாசலத்தில் நடைபெற்றது.  விருத்தாசலத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த  ஜெகதீசன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அப்போதைய மாவட்டச் செயலாளர் தோழர் என்.ஆர்.  ராமசாமியுடன் இணைந்து அந்த மாநாட்டை நடத்துவதற்கு எல்லா உதவி களையும் செய்தார். அம்மாநாட்டில் தோழர்கள் கே.பி. ஜானகியம்மாள், பாப்பா உமாநாத், மைதிலி சிவராமன், ஷாஜாதி, சுதா சுந்தர்ராமன் உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டதையும் குறிப்பிட்டார். தாம் விழுப்புரத்தில் பணியாற்றிய போது அந்த நகரத்தில் பணியாற்றி வந்த கட்சித் தலைவர் எஸ். பத்மநாபன்  (ரயில்வேயில் பணியாற்றி தொழிற்சங்க  பணிக்காக வேலை நீக்கம் செய்யப்பட்ட வர்), தாமும் கட்சியில் சேருவதற்குத் தூண்டுதலாக இருந்தார் எனக் கூறினார்.  அதேவேளையில் 1969ஆம் ஆண்டு மின்வாரியத்தில் பணியாற்றிய தோ ழர்கள் ஜி. கிருஷ்ணமூர்த்தி, கே. ஜானகி ராமன் ஆகிய இருவரும்தான் தன்னை கட்சியில் சேர்த்தார்கள் என்றும் உணர்வு  பொங்கக் கூறினார். தோழர் எஸ்.ஜே, கட்சியின் விருத்தாச் சலம் நகரச் செயலாளராக இரண்டு முறை தேர்வு செய்யப்பட்டு ஆறு ஆண்டு கள் செயல்பட்டிருக்கிறார். கட்சியின் அப்போதைய தென்னாற்காடு மாவட்டக் குழு உறுப்பினராகப் பல ஆண்டுகள் செயல்பட்டிருக்கிறார்.

தற்காலிகத் தொழிலாளியாக வேலையில் சேர்ந்து, நிரந்தரக் களத்  தொழிலாளியாகி, படிப்படியாக இள நிலைப் பொறியாளராக உயர்ந்த எஸ்.ஜே 1998ஆம் ஆண்டு மின் வாரி யத்தின் பணியிலிருந்து ஓய்வுபெற்றார்.  இயக்கத்தின் இதர பணிகளைத் தொ டர்ந்தார். கடந்த 20 ஆண்டு காலமாக தமிழ்நாடு மின்வாரிய ஓய்வுபெற்றோர் நல அமைப்பின் பொதுச் செயலாள ராகப் பணியாற்றி வருகிறார். கட்சியின் தென்சென்னை மாவட்ட மையக் கிளை உறுப்பினராகவும் இருந்து வருகிறார். ஜெகதீசன் - உமா இருவருக்கும் 1960ஆம் ஆண்டு திருமணம் ஆனது. இணையர் மாதர் சங்கத்தின் மாவட்டப் பொருளாளராக சில ஆண்டுகள் பணி யாற்றியிருக்கிறார். பணியில் இருக்கிற மகள், மகன் இருவரும் கட்சியின் ஆதர வாளர்களாக உள்ளனர். ஜெகதீசன் மின்வாரியத்தில் தொழி லாளியாக சேர்ந்து தொழிற்சங்கத்தில் இணைந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து இடைக்குழு உறுப்பி னராக, மாவட்டக்குழு உறுப்பினராக செயல்பட்டிருக்கிறார். தற்போது கட்சி உறுப்பினராக இருந்துகொண்டு, மின்வா ரிய ஓய்வுபெற்ற தொழிலாளர் சங்கத் தின் மாநிலத் தலைவராக ஓய்வின்றி இயங்கி வருகிறார். கைது, சிறை, தற்கா லிக வேலை நீக்கம் எனப் பல அடக்கு முறைகளை எதிர்கொண்டும் ஏற்றுக் கொண்ட இயக்கத்தில் சற்றும் பின்வாங் காது 60 ஆண்டுகளுக்கும் மேலாக தோழர்  எஸ்.ஜே. முன்னுதாரணமாகச் செய்து வரும் களப்பணி பாராட்டுக்குரியது, பின்பற்றத்தக்கது.