tamilnadu

img

போட்டித் தேர்வு - பாஸ் தான், ஆனா இல்ல..!!

அலோ.. அலோ.. சார்... நான் பாஸ் ஆயிட்டேன்...
தீபாவளி நேரம் என்பதால் பேசிய
வரின் உள்ளுக்குள் மத்தாப்பு சொரிந்து கொண்டி
ருக்கும் என்றுதான் தோன்றியது.   ஏற்கனவே பேசிய
சிலரோ, இந்த நேரத்துலயா ரிசல்ட் விடுறது.. தீபா
வளியக் கொண்டாடிட்டு அப்புறமா விட்டுருக்கலாம்.. எப்படிக் கொண்டாடுறது என்றார்கள். இன்னும் சிலரோ, இன்னும் பார்க்கவில்லையாம். புது டிரஸ் மாட்டிட்டு ஊர் சுத்தனும் சார்... ஒண்ணாம் தேதி பாத்துக்கலாம் என்றனர்.
ஓ... நல்லது. தீபாவளிய நல்லாக் கொண்டாடுங்க... அப்புறமா சந்திக்கலாம் என்று 
வைக்கப்போன நிலையில், சார்... சார்...  எவ்வளவு மார்க்னு கேக்கலையே..
சரி... எவ்வளவு வாங்கிருக்கீங்க..
127 சார்... பாஸ் மார்க்க விட 37 மார்க் அதிகமா 
வாங்கிட்டேன்..
சரி... சரி... தீபாவளிக்கு அப்புறமா பேசிக்கலாம்... 
அவருக்கு சந்தேகம் தொற்றிக் கொண்டது. என்ன சார்... பாஸ் தான..?
விட மாட்டார் போலிருக்கிறது. சொல்லிற வேண்டியதுதான்.. பாஸ் தான் ஆனா, இல்ல..
அய்யோ... குண்டத் தூக்கிப் போடுறீங்களே..
உண்மையத்தான் சொல்றேன்... பாஸ் மார்க் 300க்கு 90 தான்.. ஆனா, வேலை கிடைக்குறதுக்கு உத்தரவாதம் இல்ல..
ஏன் சார்... அப்புறம் எதுக்கு பாஸ் மார்க் 90னு வெக்குறாங்க..
இப்போ ஸ்கூல்ல ஒரு பாடத்துல எவ்வளவு வாங்குனா பாஸ் ஆகலாம்..
35 வாங்குனாப் போதும்..
ஆனா, அடுத்து 11 ஆம் வகுப்புக்கோ அல்லது கல்லூரிக்கோ சேர்க்கைக்குப் போகுறப்ப, 35 வாங்கினா சீட்டு கிடைச்சுருமா..?
இல்லியே... அவருக்குப் புரியத் தொடங்கி
யிருந்தது.
அதுமாதிரிதான் இங்கயும்... மொத்தம் 300 மதிப்பெண்கள்... அதுல 90 மதிப்பெண்கள் வாங்குனா
தேர்ச்சி... ஆனா தரப்பட்டியல் உருவாக்குவாங்க.. அதுல இட ஒதுக்கீடும் இருக்கும்... ஒரு பிரிவுக்கு
700 பணியிடங்கள் ஒதுக்குறாங்கனு வெச்சுக்குவோம்... அந்தப் பிரிவுல மதிப்பெண் அடிப்படைல பட்டியல் உருவாகும். அந்தப் பட்டியல்ல 90 மதிப்பெண்கள் வாங்குனவங்க வரைக்கும் இடம் பிடிச்சிருப்பாங்க.. பொதுவான ரேங்க் என்ன, அந்தப் பிரிவுல என்ன ரேங்க்னு தனித்தனியாப் பிரிப்பாங்க..
அவரிடமிருந்து அலைபேசியை வாங்கிய அவருடைய அம்மா பேசத் தொடங்கினார்.. ஆமா, சார்... மதிப்பெண் பட்டியல்ல போட்டுருக்காங்க..
அதேதான்.. இப்போ 700 பணியிடங்கள்னா, தரப்பட்டியல்ல முதல்ல இருக்குற 700 பேருக்குதான் வேலை கிடைக்கும்னு சொல்ல முடியாது...
நேர் காணலுக்குக் கூப்புடுவாங்க.. சிலர் வரமாட்டாங்க.. சிலர் வந்துட்டு அவங்களுக்கு வேணும்குற மாவட்டம் அல்லது துறை கிடைக்
கலைனு போயிருவாங்க.. அப்போ ரெண்டாவது நேர்காணல் நடக்கும்... அதுல 700க்கு மேல இருக்குறவங்களக் கூப்புடுவாங்க.. 
சில பேரு, ரெண்டு பிரிவுல இருப்பாங்களோ..?
ஆமா... ஒண்ணுல கிடைக்கலேனா, இன்னொன்னுல கிடைக்க வாய்ப்புருக்கு... தமிழ்வழிப்படிப்பு படிச்சவங்களுக்கு குறைஞ்ச மதிப்பெண் எடுத்துருந்தாலும் குரூப் 2ஏல கிடைச்சதா சொல்றாங்களே சார்..?
குரூப் 2, 2ஏ பணியிடங்களுக்கு பட்டப்படிப்பு படிச்சுருக்கனும்.. அதாவது ஒண்ணாம் வகுப்புல இருந்து பட்டப்படிப்பு வரைக்கும் தமிழ்ல படிச்சுருந்தாதான் தமிழ் வழிப்படிப்புக்கான இட ஒதுக்கீடு கிடைக்கும்... அப்படிப் படிச்சவங்க ரொம்பக் குறைவான எண்ணிக்கைலதான் இருந்திருப்பாங்க... அதனால மதிப்பெண் குறைவா 
இருந்தாக்கூட கிடைச்சிருக்கும்..
ஓ... எனக்குத் தெரிஞ்ச ஒருத்தர் 12ஆம் வகுப்பு வரைக்கும் தமிழ் மீடியம்தான்... அப்புறமா இன்ஜினி
ரியங் படிச்சாரு... அது ஆங்கில வழிக்கல்வி... ஆனா மறுபடியும் தபால் மூலமா தமிழ் வழிக்கல்வில
ஒரு பட்டம் வாங்குனாரு.. அத வெச்சு குரூப் 2ல போயிட்டாரு..
அது சரிதான்... முதல் பட்டம் தமிழ்வழிக்கல்வில இருக்கனும்னு விதி சொல்லலயே.. 
சரி சார்... தெரிஞ்சுக்குறதுக்காகக் கேக்குறேன்... எதுக்காக இந்தக் குறைந்தபட்ச மதிப்பெண்கள்..?
அவ்வளவு வாங்குனாத்தான் வேலை கிடைக்கும்... ஒருத்தரு வேலைக்கு வர்றதா இருந்தா
இவ்வளவு மதிப்பெண் வாங்கனும்னு குறைந்தபட்சத் தகுதியா அத நிர்ணயிச்சிருக்காங்க... சில தேர்வுகள்ல பட்டப்படிப்புல 55 விழுக்காடு வாங்கி
ருக்கனும்னுலாம் போட்டுருப்பாங்களே... அது மாதிரி
தான்... யாருமே தேர்வுல குறைந்தபட்ச மதிப்பெண் வாங்கலேனா, இடங்கள்லாம் காலியாத்தான் இருக்கும்..
சார்... புரியலை சார்..
இப்போ பத்து காலியிடங்களுக்கு ஆள் எடுக்குறாங்கனு வெச்சுக்குவோம்.. 300க்கு ஆறு பேர்தான் 90 மதிப்பெண்ணோ அல்லது அதுக்கு மேலயோ வாங்குனாங்கனா, அவங்களுக்கு மட்டும்தான் வேலை.. நாலு இடம் காலியாத்தான் இருக்கும்.. மறுபடியும் தேர்வு வெப்பாங்க.. 
புரியுது.. புரியுது... சார்.. தரப்பட்டியல்னா மேலருந்து தயாரிப்பாங்க.. அதே நேரத்துல தரப்பட்டியலோட குறைந்தபட்சம் என்ன அப்புடினும்
வெச்சுருக்காங்க..
அதேதான்... 
அதற்குள் அடுத்த அழைப்பு.. அவரும் “தேர்ச்சி” 
பெற்ற உற்சாகத்தில்தான் பேச ஆரம்பித்தார்.
சார்... இதுல பாஸ் பண்ணிட்டேன்... அடுத்ததா தேர்வு எழுதுறதா, வேண்டாமா..?
இப்படித்தான் பலரும் கேட்கிறார்கள். தர வரிசை 
எண்ணைப் பார்த்தாலே 99 விழுக்காடு நமது நிலைமை என்ன என்று தெரிந்துவிடும். அதை மொத்த மற்றும் இட ஒதுக்கீட்டுப் பிரிவுகளுக்கான காலியிட எண்ணிக்கையோடு ஒப்பிட்டுப் பார்த்தால் தெளிவாகத் தெரிந்துவிடும். அதோடு குரூப் 4 தரப்பட்டியல்ல தட்டச்சர்
பணிக்கு ஏராளமான
இடங்கள்.. தட்டச்சுத் தேர்வு எழுதி, சான்றிதழ் பெற்றவர்கள்தான் அதற்குத்
தகுதி பெற்றவர்களாவர். அத
னால் மொத்தமாக 9 ஆயிரம் பணியிடங்களில் இவ்வளவு
ஒதுக்கீடு என்று பார்க்க முடியாது.  
இந்த அழைப்புகளுக்கு விடை
யளித்துக் கொண்டிருந்தபோது பக்கத்தில்
வந்து உட்கார்ந்தவர் அனைத்து உரை
யாடல்களையும் கேட்டுக் கொண்டிருந்தார். நான் பேசி முடித்தவுடன், 35 வாங்குனா பாஸ்னு
சொல்றோமே... எல்லா மாநிலத்துலயும் இப்படித்தானா என்றார்.
அப்படியில்ல... பல இடங்கள்ல மாறுது..
நம்மள விட நல்ல விதமா எங்கயாவது இருக்கா..?
அப்படிச் சொல்ல முடியாது... நம்ம மாநிலத்துல உள்ள கல்விமுறைல குறைபாடுகள் இருக்கு... ஆனா
மத்த மாநிலங்களோட ஒப்பிடுறப்ப நாம நல்ல இருக்கோம்..
எத வெச்சு சொல்றீங்க..
இப்போ உத்தரப்பிரதேசத்த எடுத்துக்கோங்க.. ஒவ்வொரு பாடத்துலயும் 33 வாங்குனா தேர்ச்சி..
2 தான குறைவா இருக்கு..
பத்தாம் வகுப்புல இருக்குற மாணவன், எல்லாப் பாடத்துலயும் 35 வாங்கனும்ல...
ஆமா, அங்க அப்புடி இல்லியா..?
இல்ல... ஏதாவது ஒரு பாடத்துல பூச்சியம் வாங்கிருந்தாக்கூட அடுத்த வகுப்புக்குப் போயிரலாம்.. இந்தில மட்டும் விட்டுரக்கூடாது... 
அடடே... மதிப்பெண் பற்றிக் கவலைப்படாத கல்வி முறையா..?
அப்படிலாம் இல்ல.. தேர்ச்சி விகிதத்த அதி
கரிச்சுக் காட்டுறதுக்காக அப்புடி வெச்சுருக்காங்க..
பேசிக் கொண்டிருக்கும்போதே அடுத்த அழைப்பு வந்தது.
சார்... 144 வாங்கிருக்கேன்... வேலைக்கு ஆர்டர் எப்போ வரும்..??
மறுபடியும் முதல்ல இருந்தா என்று கேட்டவாறு பக்கத்தில் அமர்ந்திருந்வர் கிளம்பினார்...