tamilnadu

img

வாழ்த்துச் செய்தி - பினராயி விஜயன் ,முதலமைச்சர், கேரள அரசு

தீக்கதிர் தமிழ் நாளிதழ் தனது 60ஆம் ஆண்டு துவக்கவிழாவை கொண்டாடுவதையும், இதையொட்டி சிறப்பிதழ் வெளியிடுவதையும் அறிந்து நான் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

தீக்கதிர், தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டங்களை முன்னெடுத்துச் செல்வதிலும் அவர்களுக்கு நீதியை உறுதி செய்வதிலும் எப்போதும் முன்னணியில் நிற்கிறது. வரும் நாட்களிலும் நீங்கள் வர்க்க மற்றும் வெகுஜன மக்கள் நலனுக்கான போராட்டங்களின் முன்னோடியாகவும் முற்போக்கு கருத்துக்களை உயர்த்திப் பிடிப்பதிலும் உறுதியாக நிற்பீர்கள் என்று நான் நம்புகிறேன். 60ஆம் ஆண்டு கொண்டாட்டங்கள் தீக்கதிர் நாளிதழின் இடையறாத பணிக்கு மேலும் அர்த்தமுள்ள வகைகளில் வலுசேர்க்கட்டும். எனது இனிய வாழ்த்துக்கள்.

;