நாகர்கோவில், ஜன.2- அரசு ரப்பர் கழக தொழிற்சங்க பிரதி நிதிகளுடன் தொழிலாளர்களின் ஊதிய உயர்வு குறித்து, தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் வெள்ளியன்று (ஜன.31) பேச்சுவார்த்தை நடத்தினார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் அமைச்சர் த.மனோ தங்கராஜ் கூறியதா வது: கன்னியாகுமரி மாவட்ட அரசு ரப்பர் கழக செயல்பாடுகள் குறித்தும், ரப்பர் தோட்ட தொழிலாளர்களின் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை நிவர்த்தி செய்வது குறித்தும், அரசு ரப்பர் கழக தொழிற்சாலையினை இலாப நோக்கில் கொண்டு செல்வது குறித்தும் துறை அலு வலர்கள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதி களுடன் கலந்தாய்வு மேற்கொள்ளப் பட்டது. கடந்த சில வருடங்களாக தொடர்ந்து நடைபெற்றுவரும் தொழிலாளர்களின் கோரிக்கைகள் குறித்து தற்போது நடவ டிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கன்னியாகுமரி மாவட்ட ரப்பர் கழக தொழிற்சங்கத்தினருடன் இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு இதுநாள்வரை ஊதிய உயர்வு குறித்து நான்கு கட்ட பேச்சு வார்த்தை நடைபெற்றது. அதன் அடிப்படையில், தற்போது அனைத்து தரப்பினரும் ஏற்றுக்கொள் ளும் வகையில் கூடிய விரைவில் நல்ல முடிவு ஏற்படும் என்றார். ரப்பர் கழகத்தில் பணியாற்றும் அனைத்து அலுவலர்கள், தொழிலாளர்களின் முன்னேற்றத்திற்கு அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டு மெனவும், அரசு எடுக்கும் அனைத்து நட வடிக்கைகளுக்கு தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிலாளர்கள் ஒத்துழைக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.
இக்கூட்டத்தில், நிர்வாக இயக்குநர் (அரசு ரப்பர் கழகம்) தின்கர் குமார், அரசு ரப்பர் கழக பொது மேலாளர் சி.குரு சாமி, தொழிலாளர் துணை ஆணையர் முகமது அப்துல் காதர், வழக்கறிஞர் மகேஷ், தொழிற்சங்க பிரதிநிதிகள் எம். வல்சகுமார், நடராஜன் (சிஐடியு), இளங் கோ, விஜயன் தொமுச கூட்டமைப்பு, மகேந்திரன் (அண்ணா தொழிற்சங்க பேரவை), நடராஜன் (தொமுச) பால்ராஜ் (எம்எல்எப்), ஞானதாஸ் (ஜேடிஎல்எப்), ஞானதாஸ் (சோனியா-ராகுல் பேரவை) உட்பட அரசு ரப்பர் கழக அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.