tamilnadu

img

சமத்துவத்திற்கு எதிரானவர்களால் காந்தி கொல்லப்பட்டார் : ஹர்ஷ் மந்தர்

சென்னை, ஜன. 31 - சமத்துவத்திற்கு எதிரானவர்களால் காந்தி கொல்லப்பட்டார் என்று சமூக செயற்பாட்டாளர் ஹர்ஷ்மந் தர் கூறினார்.  மகாத்மா காந்தி நினைவுதினத்தை, தமிழக மக்கள்ஒற்றுமைமேடை ‘மதவெறி எதிர்ப்பு நாளாக’ கடைபிடித்து வருகிறது. இதனை யொட்டி திங்களன்று (ஜன.30) சென்னையில் நடைபெற்ற கருத்த ரங்கு நடைபெற்றதுமகாத்மா காந்தி யின் உருவப்படத்திற்கு மேற்கு வங்க முன்னாள் ஆளுநர் கோபால கிருஷ்ணகாந்தி மாலை அணிவித்து மரியாதை செலுத்தி னார். இந்தக் கூட்டத்தில்  சமூகசெயற்பாட் டாளர் ஹர்ஷ்மந்தர் பேசியதாவது: மதம், மொழி, இனம்,பாலின பாகுபாடின்றி அனைத்து குடிமக்களும் சம உரிமையோடு வாழும் தேசத்தை  அண்ணல் காந்தி கனவு கண்டார். அதற்குஎதிரான கருத்து கொண்ட வர்கள் கொன்றார்கள்அனைத்து குடிமக்களும், இஸ்லாமியர் களுக்கும் சமஉரிமை உள்ளதாக அவர் கருதினார். இந்தியா சுதந்திரம் பெற்ற விழாவை கொண்டாடாமல், இந்து இஸ்லாமியர் கலவரம் நடந்த நவகாளிக்கு சென்று ஒற்றுமைப் படுத்த முயற்சித்தார். 65 ஆயிரம் ராணுவ வீரர்கள் செய்ய முடியா ததை, காந்தி என்கிற ஒற்றை மனிதர் செய்தார்.

டெல்லியிலும் மதவாத பிரிவினை யால் முரண்பட்டு மோதிக் கொள்வதை யும், கொன்று குவிப்பதையும் கண்டார். ஒரு இஸ்லாமிய குழந்தை  அச்சமின்றி நடமாடும் வரை எனது பணி முடிந்துவிடவில்லை என்றார். டெல்லி அகதி முகாம்கள் நிரம்பி  வழிந்தன. பாகிஸ்தானில் உள்ள இந்துக்களுக்கு அந்தநாடு சொந்தம். அதேபோல் இங்குள்ள இஸ்லாமி யர்ளுக்கு இந்தியா சொந்தம் என்ற கோட்பாட்டை வலிமையாக எடுத்துரைத்தார். சாதி, மத பேதங்களுக்கு அப்பாற் பட்டு, சகோதரத்துவத்தோடு வாழ காந்தி விரும்பினார். பிரிட்டிஷாரை எதிர்த்த போது அவர் கொல்லப்பட வில்லை. சமத்துவத்திற்கு எதிரான வர்களால் சாய்க்கப்பட்டார். காந்தி யடிகள் விட்டுச்சென்ற பணியை மக்கள் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். அதுவே அவருக்கு செய்யும் மரியாதை இவ்வாறு அவர் கூறினார். அரிபரந்தாமன் சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி து.அரிபரந்தாமன் குறிப்பிடுகையில், “நாட்டில் நிலவும் சனாதன சூழல், மதவெறி பல்வேறு பெயர்களில் உருமாறி வருகிறது. தீண்டாமை ஒழிப் பிலிருந்து சாதி ஒழிப்பிற்கு முன்னேறி யதும், இந்து, இஸ்லாமியர் ஒற்று மையை வலியுறுத்தியதும் அவரது கொலைக்கு காரணமாக மாறியது. காந்தி நினைவு நாள் அல்ல. படு கொலை செய்யப்பட்ட நாள். காந்தியை கொன்றது மதவெறி. மதவெறியை எதிர்த்து போரா டுவதுதான் அவரது நினைவு நாள் உணர்த்தும் செய்தி” என்றார்.

வே.மீனாட்சிசுந்தரம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் வே.மீனாட்சிசுந்தரம் பேசுகையில், காந்தியின் அரசியலை யும், தர்மகர்த்தா கொள்கையையும் மார்க்சிஸ்ட்டுகள் கடுமையாக விமர் சிக்கும் அதேநேரத்தில், அவரின் நேர்மை, எளிமை கொண்ட  ஆளு மையை பின்பற்றுகிறோம்.

காந்தியின் ஆன்மீகம்

காந்தியின் ஆன்மீகமே அவ ருக்கு சர்வதேச மதிப்பை பெற்றக் கொடுத்தது. இந்து தெய்வ அடிப் படையை கொண்டிருந்தாலும், கடந்த கால இந்து மத சீர்திருத்த ஆன்மீகங் களை விட காந்தியின் ஆன்மீகம் உயர் வானது; வித்தியாசமானது. இந்து மார்க்கங்களில் உள்ள சனா தன  கரடு முரடுகளையும், பொருட் களை வீணடிக்கும் சடங்குகளையும், ஷேத்திர யாத்திரைகளையும், வர்ணா சிரம நடைமுறைகளையும் பிரார்த் தனை கூட்டங்கள் மூலம் களைய முயற் சித்தார். கோரிக்கைகளை வைத்து வழி படும் இந்து மார்க்கங்களை, மன ஆறு தல் தேடும் வழியாக மாற்ற முயன்றார்.    தெய்வ வழிபாட்டை பஜனை பாடும் பிரார்த்தனை கூட்டமாக மாற்றினார். அந்த பஜனை வரிகள் மனதை பக்கு வப்படுத்துவதாக இருந்தன. ‘வைஷ்ணவ ஜனதே...’, ‘ரகுபதி ராகவ ராஜாராம்...’ ஆகிய இரு பாடல்களும் பகவத் கீதை கூறும் ஆன்மீகத்தை விட, காந்தியின் ஆன்மீகம் உயர்வானது என்பதை உணர்த்தின. காந்தி முன்மொழிந்த அரசி யல் கருவிகளான ஒத்துழையாமை, அகிம்சை, சத்தியாகிரகம், உண்ணா நிலை ஆகியவற்றிற்கு அடிப்படையே, அவரது வித்தியாசமான ஆன்மீக பார்வைதான் காரணம். காந்தியின் ஆன்மீகம் மதவெறியை முறியடிக்க உதவும் கருவியாகும். காந்தியின் வாரிசுகள் இந்த உண்மையை பார்க்க தவறுகின்றனர்.

இந்தியா- பாகிஸ்தான் பிரிவினை

இந்தியா- பாகிஸ்தான் பிரிவினை யின் போது ஏற்பட்ட மதக் கலவரம் நாடு முழுவதும் பரவாமல் தடுத்ததற்கு, காந்தியின் பிரார்த்தனை கூட்டம் பெரு மளவு உதவியது. குறிப்பாக, உத்திரபிர தேசத்தில் கலவரம் பரவலாக நடக்கா மல் தடுக்கப்பட்டது. காந்தியின் பஜனை கள், இந்து மத நம்பிக்கையுள்ள கிராமப்புற ஏழைகளை வெறியர்களாக மாற்ற தடையாக இருந்தது. இதுவும், காந்தியை, ஆர்.எஸ்.எஸ் சுட்டுக் கொல்வதற்கு முக்கிய காரணமாக இருந்தது.

குலத்தொழில்

இந்திய வரலாற்றில் குலத்தொழில் முறையால் உருவான சாதி கட்டுப் பாட்டிற்கும், உழைப்பை இழிவாக கருதும் பார்வைக்கும் முடிவுகட்ட அக்பர், ஒவுரங்கசீப் முயன்று தோற்ற னர். காந்தி அந்த முயற்சியில் வெற்றி பெற்ற அரசியல் தலைவரானார். இந்துத்துவா வெறுப்பு அரசியலை வெல்ல காந்தியின் ஆன்மீகமே சரி யானது. காந்தியின் தர்மகர்த்தா நியாயம் பொருளாதார வளர்ச்சிக்கு உதவாது என்பதையும் இன்றைய காந்தியவாதிகள் புரிந்து கொள்ள வேண்டும் என்றார் மீனாட்சிசுந்தரம். ஜவாஹிருல்லா மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா.எம்.எம்ஜவாஹி ருல்லா பேசுகையில், “இந்து தேசியத் திற்கு எதிராக, சிறந்த இந்துவாக, சகிப்புத் தன்மையின் அடை யாளமாக காந்தி விளங்கியதால் கொன்றார்கள். காந்தியை கொல்ல 6 முறை முயன்றார்கள். அந்த முயற்சி களில் இரண்டு முறை நாதுராம் கோட்சே இருந்தான். இறுதியாக அவன் காந்தியை கொன்றான். காந்தி கண்ட கனவை, கிராமங்கள் தோறும் கொண்டு செல்ல வேண்டும். நாட்டை மோடி எங்கு கொண்டு செல்கிறார் என்பதை வீடுவீடாக சென்று சொல்ல வேண்டும். காந்தி சொன்ன ஹேராமும், கோட்சே உச்சரித்த ஹேராமும் நேர் எதிரானவை. தேசத்தை காக்கும் அறப்போரில் ஈடுபடுவோம்” என்றார். மக்கள் ஒற்றுமை மேடை ஒருங்கிணைப் பாளர் க.உதயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அ.கோப ண்ணா (காங்கிரஸ்), தமிழன் பிரசன்னா (திமுக), வன்னியரசு (விசிக), பேரா. ஹாஜாகனி (தமுமுக), பிஷப் தேவ சகாயம், பத்திரிகையாளர் ஜெனிபர் வில்சன், சென்னை மக்கள் மேடை ஒருங்கிணைப்பாளர் எஸ்.குமார் உள்ளிட்டோர் பேசினர்.


 

;