tamilnadu

img

கெயில் எரிவாயு குழாய் பதிக்க எதிர்ப்பு: விவசாயி தற்கொலை

தருமபுரி, ஏப்.13- கெயில் எரிவாயு குழாய் பதிப்புத் திட்டத்திற்கு எதிர்பபு தெரிவித்து தருமபுரி அருகே விவசாயி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில், ஆவேசமடைந்த அவரின் உறவினர்கள் விவசாயியின் சடலத்துடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கேரள மாநிலத்தில் இருந்து தமிழகத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம் வழியாக கர்நாடக மாநிலம் பெங்களூரு வரை கெயில்  நிறுவனம் சார்பில் எரிவாயு குழாய் பதிப்புத் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரு கிறது. இத்திட்டத்துக்காக குழாய்கள் பதிக்க  விளை நிலங்களில் கெயில் நிறுவன ஊழியர்கள் கடந்த சில நாட்களாக அளவீட்டுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்தப் பணிகளுக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக தருமபுரி மாவட்டம் இண்டூர், பாலவாடி சுற்று  வட்டார பகுதிகளில் விளை நிலங்கள் அளவீட்டு  பணிகள் நடைபெற்று வந்தன. இதனை கண்டி த்து செவ்வாய் மற்றும் புதன்கிழமை அப்பகுதி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த  இரண்டு நாள் ஆர்ப்பாட்டத்திலும் கரியப்பன அள்ளி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கணேசன் (43) என்பவர் பங்கேற்றுள்ளார். இச்சூழலில் தன் விளைநிலம் பறிபோய்விடும் என்ற மனஉளைச்சலிலும், கடும் துயரத்திலும் இருந்த விவசாயி கணேசன் திடீரென அப்பகுதி யில் உள்ள அவரது நிலத்துக்கு சென்று அங்கிருந்த மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை கண்ட அதிர்ச்சி யடைந்த அவரது குடும்பத்தினர் மற்றும் விவசாயி கள் கணேசனின் சடலத்துடன் தருமபுரி- ஒகேனக்கல் சாலையிலுள்ள ஏ.செக்காரப்பட்டி பகுதியில் மறியலில் ஈடுபட்டனர்.

இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் பி.டில்லிபாபு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ஏ.குமார், விவசாயிகள் சங்க மாவட்ட செய லாளர் சோ.அருச்சுணன், மாவட்ட தலைவர் கே.என்.மல்லையன், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.கிரை ஸாமேரி, வே.விசுவநாதன், ஆர்.சின்னசாமி, விவ சாயிகள் சங்க பகுதி செயலாளர் சக்திவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இப்போராட்டம் குறித்து தகவல் அறிந்த தருமபுரி  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.கலைச் செல்வன், சார் ஆட்சியர் சித்ரா விஜயன் மற்றும் வருவாய் துறையினர் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடு பட்டோருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.  அப்போது, விளை நிலங்களில் எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும். உயிரிழந்த விவசாயி கணேச னின் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் நிவாரணம் மற்றும் அவரது வாரிசுகளுக்கு அரசு பணி வழங்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டோர் ஆவேசமாக தெரிவித்தனர். இதனையடுத்து சார் ஆட்சியர் சித்திரா விஜியன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலை செல்வன் ஆகியோர் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் பி.டில்லிபாபு மற்றும் விவசாயி களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதன்காரணமாக அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

அரசு தலையிட பெ.சண்முகம் வேண்டுகோள்

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பெ.சண்முகம் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: விவசாயிகளுக்கு சொந்தமான விளை நிலங்களில் கெயில் நிறுவனம் எரிவாயு குழாய் பதிப்பதை எதிர்த்து விவசாயிகள் போராடினர். இதன் விளைவாக, தமிழ்நாடு அரசு கருத்துக் கேட்பு கூட்டத்தை நடத்தி விளைநிலங்களில் குழாய் பதிக்கக்கூடாது என்றும் மாற்றுவழியில் திட்டத்தை நிறைவேற்ற வேண்டுமென்றும் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் சட்டமன்றத்தில் அறிவித்தார். விளை நிலங்களில் போடப்பட்டிருந்த குழாய்களும் அப்புறப்படுத்தப்பட்டன.  இப்போது அந்த திட்டத்தை செயல்படுத்தும் விதமாக கெயில் நிர்வாகம் விவசாயிகளுக்கு சொந்தமான நிலங்களில் அவர்களுடைய ஒப்புதல் இல்லாமல் அடாவடித்தனமாக குழாய் பதிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதை எதிர்த்து விவசாயிகள் போராடி வருகின்றனர். இந்த நிலையில், தருமபுரி மாவட்டம், பெண்ணாகரம் வட்டம், கரியப்பனள்ளி கிராம த்தைச் சேர்ந்த ஏழை விவசாயி சி.கணேசன் (வயது 42) என்பவருக்கு சொந்தமான 64 சென்ட்  நிலத்தில் புதனன்று குழாய் பதிக்க அதிகாரிகள் வலுக்கட்டாயமாக முற்பட்ட போது பொது மக்களும் சேர்ந்து போராடியுள்ளனர். சிறிது  நேரத்தில் அருகிலிருந்த தனது வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார் விவ சாயி கணேசன். விவசாயி கணேசனின் மர ணத்திற்கு கெயில் நிர்வாகம் தான் பொறுப்பேற்க வேண்டும். 

தமிழ்நாடு அரசு, இந்தப் பிரச்சனையில் தலையிட்டு, எரிவாயு குழாய் பதிக்கும் பணியை முற்றிலும் தடுத்து நிறுத்த உத்தரவிட வேண்டும். மாண்டு போன விவசாயி கணேசனின் குடும்பத்திற்கு 50 லட்சம் ரூபாய் கெயில் நிர்வாகம் இழப்பீடு வழங்க வேண்டும். அக்குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கிட வேண்டும். விவசாயிகளின் விருப்பத்துக்கு விரோதமாக விளை நிலங்களில் திட்டங்களை நிறைவேற்றுவது தொடர்பான பிரச்சனையில் முதலமைச்சர் அவர்கள் தமிழக அரசின் நிலையை விவசாயிகளுக்கு தெளிவுப்படுத்த வேண்டுமென்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோருகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.