tamilnadu

img

ஆக்கண்ணா புகார் செய்தார். அழகப்பா பல்கலை.யில் இலவச மருத்துவ முகாம்

சிவகங்கை, ஏப்.1-  சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழ கப்பா பல்கலைக்கழகத்தில் இளைஞர் செஞ்சி லுவைச் சங்கம், அழகப்பா பல்கலைக்கழக தேசிய நாட்டு நலப்பணித் திட்டம், செஞ்சுருள் சங்கம், தேசிய மாணவர் படை, சுகாதார மையம், மதுரை ராக்ஸ் மருத்துவமனை, கேஆர்எஸ் நியூ லைஃப் மருத்துவமனை சார்பில் இல வச மருத்துவ முகாம் நடைபெற்றது.  இதில், ஒருங்கிணைப்பாளர் முனைவர் பி. சீனிவாசன் வரவேற்றுப் பேசினார். அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் பொறுப்புக் குழு உறுப்பினர்கள் முனைவர் சுவாமிநாதன், பேராசிரியர் கருப்புசாமி ஆகியோர் துவக்கி வைத்தனர். பல்கலைக்கழக பதிவாளர் பேராசி ரியர் சேகர் முன்னிலை வகித்தார். மதுரை கேஆர்எஸ் நியூ லைப் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர் ஜாஸ்மின் கலந்து  கொண்டார்.  இதில், பல்கலை. மாணவ-மாணவிகள், பேராசிரியர்கள், அலுவலர்களுக்கு உடல் பரி சோதனை செய்யப்பட்டது. மேலும் அவர் களுக்கு மருத்துவ ஆலோசனை மற்றும் மருந்து கள் வழங்கப்பட்டன.