மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை செல்லூர் பகுதிக்குழு - ப்ரீதா ஹோமியோ மருத்துவமனை இணைந்து பாக்கியநாதபுரத்தில் கொரோனா தடுப்பு இலவச ஹோமியோ மருத்துவமுகாமை நடத்தின. 1,300-க்கும் மேற்பட்ட மக்கள் பலனடைந்தனர். மருத்துவர்.டி.செங்குட்டுவன் தலைமையிலான மருத்துவக்குழுவினர் மாத்திரைகளை வழங்கினர். கட்சியின் பகுதிக்குழு செயலாளர் ஜா.நரசிம்மன், மாமன்ற முன்னாள் உறுப்பினர்கள் பா.பழனியம்மாள், க.திலகர் மற்றும் வி.கோட்டைச்சாமி, வி.பாலசுப்பிரமணி, ஆர்.பிச்சை, எல்.ஞானசுந்தரம், க.இளங்கோவன், கே.நாகராஜ், ஆர்.தங்கமாயன், கே.சுந்தரலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.