tamilnadu

img

திரைப்பட இயக்குநர் டி.பி.கஜேந்திரன் மறைவு

சென்னை, பிப்.5-  இயக்குநரும் நடிகருமான டி.பி.கஜேந்திரன் சென்னையில் ஞாயிறன்று காலை காலமானார். அவருக்கு வயது 68. டி.பி.கஜேந்திரன் பிரபல இயக்குநர் களான கே.பாலசந்தர், விசு,, ராம நாராயணன் ஆகியோரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றி இருக்கிறார். 60க்கும் மேற்பட்ட படங்களில் அவர் உதவி இயக்குநராகப் பணியாற்றியுள்ளார். பின்னர் இயக்குநராக அவதரித்தார். 1988 ஆம் ஆண்டு வீடு மனைவி மக்கள் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். ராமராஜ னின் எங்க ஊரு காவல்காரன், கார்த்திக்கின் பாண்டி நாட்டு தங்கம், பிரபு நடிப்பில் பட்ஜெட் பத்மநாபன், பிரசன்னா நடிப்பில் சீனா தானா போன்ற குடும்பங்கள் கொண்டாடும் ஜனர ஞ்சகமான படங்களை இயக்கி மக்கள் அபி மானத்தைப் பெற்றார். இதுதவிர 40க்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்திர நடிகராக நடித்திருக்கிறார். கமல்ஹாசனின் பம்மல் கே சம்பந்தம் படத்தில் திரைப்பட இயக்குநராக அவர் நடித்த காட்சிகள் மிகவும் பிரபலம். ’ட்ராலி ஃபார்வர்டு’ என்று அவர் கூறும் வசனமும் ட்ரெண்டில் இருந்தது. இந்நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக  ஞாயிறன்று  காலை அவர் உயிரிழந்தார். கடந்த சில மாதங் களுக்கு முன்னர் அவர் இதய நோய்க்காக அறுவை சிகிச்சை செய்து கொண்டு வீட்டில் இருந்தபடியே ஓய்வு எடுத்துவந்தார்.

முதல்வர் இரங்கல்

கஜேந்திரன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், பிரபல இயக்குநரும், நடிகரும், எனது கல்லூரித் தோழருமான இனிய நண்பர் டி.பி.கஜேந்திரன் மறைவுற்ற செய்தி, மிகுந்த வருத்தத்தையும், அதிர்ச்சி யையும் அளிக்கிறது. அவரை இழந்து வாடும்  அவரது குடும்பத்தினர், திரையுலக நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரி வித்துக் கொள்கிறேன் என்று அதில் தெரி வித்துள்ளார்.

கி.வீரமணி

பெரியார் திரைப்படத்தில் முக்கிய பாத்திரத்தில் சிறப்பாக நடித்த நடிகரும், இயக்குநருமான டி.பி.கஜேந்திரன்  மறைவு செய்தி அறிந்து வருந்துவதாக  திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.