முன்னுதாரணமான கம்யூனிஸ்ட் - எஸ்.தங்கராசு
திருவாரூர் மாவட்டத்திலிருந்து கம்யூ னிஸ்ட் இயக்க வளர்ச்சிக்கு பங்களித்த மூத்த தோழர்களில் ஒருவர் எஸ்.தங்கராசு. 2025 ஆகஸ்ட் 11 (இன்று) அவரின் 80வது பிறந்த நாளையொட்டி அவரை கெளரவிப்பது நமது கடமையாகும். ஆரம்பகால வாழ்க்கை திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி வட்டம், இருள்நீக்கி கிராமத்தில் 1946 ஆம் ஆண்டில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த விவசாயத் தொழிலாளர் குடும்பத்தில் பிறந்தார். வறுமை காரண மாக எட்டாம் வகுப்புக்கு மேல் படிக்க முடியாமல், சிறு வயதிலேயே விவ சாயத் தொழிலாளியாக வயலில் இறங்கினார்.கீழத்தஞ்சையின் மன்னார் குடி வட்டம் பலமான கம்யூனிஸ்ட் இயக்கம் உருவான பகுதி. விவசாயி கள் மற்றும் விவசாயத் தொழிலா ளர்கள் இயக்கம் வலுவாக வளர்ந்த பின்னணியில் தங்கராசு இளம்வய திலேயே கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். போராட்டங்கள் மற்றும் சிறைவாசம் 1961ஆம் ஆண்டில் நில உச்சவரம்பு சட்டம் கோரி நடைபெற்ற மாநில அளவிலான மறியல் போராட்டத்தில் கலந்துகொண்டு கைது செய்யப்பட்டு நான்கு மாதங்கள் திருச்சி சிறையில் இருந்தார். 1968ஆம் ஆண்டில் கீழத்தஞ்சை முழுவதும் நடைபெற்ற விவசாயத் தொழிலாளர்களின் கூலி உயர்வு போராட்டத்தில் இருள் நீக்கியில் முக்கியப் பங்காற்றினார். 1960களில் தொடங்கி 30 ஆண்டுகளில் நடைபெற்ற கூலி உயர்வு போராட் டங்கள் அனைத்திலும் முன்னணி பாத்திரம் வகித்தார். நில உச்சவரம்பு போராட்டத்தின் போது மீண்டும் கைது செய்யப்பட்டு நான்கு மாதம் சிறைப்படுத்தப்பட்டார். இப்போராட் டங்களின் விளைவாக குன்னியூர், பெரியகுடி, நெருஞ்சனங்குடி உள்ளிட்ட கிராமங்களில் நிலமற்ற தொழிலாளர்களுக்கு உபரி நிலம் விநியோகிக்கப்பட்டது. கட்சியில் பொறுப்புகள் 1963ஆம் ஆண்டில் கட்சியின் இருள்நீக்கி கிளைச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். 1964ஆம் ஆண்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உருவானபோது இணைந்தார். 1967 பொதுத்தேர்தலில் நாகப்பட்டினம் தொகுதியில் சிறப்பான தேர்தல் பணியாற்றினார். 2000ஆம் ஆண்டில் கோட்டூர் இடைக்குழு செயலாளராக தேர்வானார். 2006ஆம் ஆண்டில் மாவட்ட செயற்குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். 2014ஆம் ஆண்டில் வயது மூப்பின் காரண மாக மாவட்டக் குழுவிலிருந்து விடு விக்கப்பட்டாலும், அனைத்து கட்சி நிகழ்வுகளிலும் தொடர்ந்து பங்கேற்று வருகிறார். ஒற்றுமையின் முன்னுதாரணம் ஒருமுறை சிறுகுறு விவசாயிகள் பயிர் இழப்பால் கூலி தர இயலாமல் போனபோது, கட்சி கிளையும் சங்கங்களும் கூடி கூலி பெறாமல் டீ மட்டும் பருகிக்கொண்டு வேலை செய்ய முடிவு செய்தனர். இது பிற்ப டுத்தப்பட்ட மற்றும் பட்டியல் சமூ கங்களின் ஒற்றுமையை வலுப்படுத்தியது. குடும்பம் மற்றும் பங்களிப்பு 1974ஆம் ஆண்டில் நிர்மலாவை மணந்தார். மூன்று மகள்கள், இரண்டு மகன்கள் (லெனின், ஸ்டாலின்) உள்ள னர். இணையரும் பிள்ளைகளும் கட்சி ஆதரவாளர்கள்.மறைந்த ஆர்.குமாரராஜா, எல்.சண்முகவேல், கல்யாணசுந்தரம், அறிவின் செல்வம் உள்ளிட்ட பலரை கட்சிக்கு கொண்டு வந்தார். 1988ஆம் ஆண்டில் கோட்டூர் ஒன்றியக் குழு அலுவலகம் கட்டு வதில் முக்கியப் பங்காற்றினார். தற்போதைய நிலை இருள்நீக்கி ஊராட்சிப் பகுதியில் நான்கு கிராமங்களில் மார்க்சிஸ்ட் கட்சியின் நான்கு கிளைகளும் 54 உறுப்பினர்களும் உள்ளனர். ஊராட்சித் தலைவர் தேர்தல்களில் கட்சித் தோழர்கள் ஐந்து முறை வெற்றி பெற்று உள்ளனர். சுமார் 100 கட்சிக் குடும்பங்கள் உள்ளன. எளிய பட்டியல் சமூகத்தில் பிறந்து கிளைச் செயலாளர் முதல் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வரை அமைப்புப் பணி களை அர்ப்பணிப்போடு நிறைவேற்றி யவர் தோழர் தங்கராசு. கைது, சிறை போன்ற அடக்குமுறைகளுக்கு அஞ்சாமல் இயக்கத் தொண்டாற்றிய வர். 80 வயதிலும் முதுமையின் சாயல் இல்லாமல் இளைஞர்களோடு தானும் இளைஞராகப் பணியாற்றி வருகிறார். இருள்நீக்கி பகுதியில் மார்க்சிஸ்ட் கட்சி பலமாக இருப்பதற்கு அடித்தள மிட்டவர்களில் ஒருவர். அவரது கெளரவிப்பு விழாவில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் கே.பாலகிருஷ்ணன் கலந்து கொள்வது கட்சிக்கு பெருமை சேர்க்கிறது.