tamilnadu

திருச்சி விரைவு செய்திகள்

ஆக.4-10 ஏவிசி பொறியியல்  கல்லூரியில் தேர்வு

மயிலாடுதுறை, ஆக.2 -  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகளுக்கான கணினி வகையிலான தேர்வானது, ஆக. 4 முதல் ஆக. 10 வரை ஏவிசி பொறி யியல் கல்லூரியில் நடைபெற உள்ளது.  தேர்வு மையத்திற்கு பாதுகாப்புப் பணிக்கு காவலர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தேர்வு எழுதுபவர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், சிறப்பு பேருந்து வசதி, தேர்வு  கூடத்திற்கு தடையின்றி மின்சார வசதி, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.  மேலும், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாவட்ட ஆட்சி யரக வளாகத்தில் அவசர தேவைக்காக 108 ஆம்புலன்ஸ்  தயார் நிலையில் வைத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. மேலும், தேர்வர்கள் தேர்வு மையத்திற்கு காலை 8.30 மணிக்குள் வர வேண்டும். 9 மணிக்கு மேல் தேர்வு  கூடத்திற்கு வருபவர்களுக்கு கண்டிப்பாக அனுமதி வழங்கப்பட மாட்டாது. மதியம் 2 மணிக்கு மேல் வருகை புரி பவர்களுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என்பதால் குறித்த நேரத்திற்குள் தேர்வு கூடத்திற்கு வருகை புரிந்திட வும், கைப்பேசி, கால்குலேட்டர் டிஜிட்டல் கடிகாரம் உள்ளிட்ட  எவ்வித எலக்ட்ரானிக் சாதனங்களையும் தேர்வு கூடத்திற்கு எடுத்து வர அனுமதி இல்லை என்றும் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

மாணவிக்கு ரூ.2.10 லட்சம் இழப்பீடு வழங்க கல்லூரிக்கு உத்தரவு '

தஞ்சாவூர், ஆக.2 -  தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தை அடுத்த முளையூர்  சமத்துவபுரம் பவளமல்லி தெருவைச் சேர்ந்தவர் ஆரோக் கிய ரெமிஜியல். இவருடைய மனைவி கீர்த்தி (28). இவர் கடந்த 2014 - 2015-ஆம் கல்வியாண்டில் அந்தப் பகுதியில்  உள்ள ஒரு நர்சிங் கல்லூரியில் நர்சிங் படிக்க விண்ணப்பித் தார். அதன்படி கடந்த 18.7.2024 ஆம் ஆண்டு பொது மருத்துவ செவிலியர் பட்டய படிப்பில் கீர்த்தி சேர்ந்தார். சேர்க்கையின் போது பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு  மதிப்பெண் சான்றிதழ், டி.சி., சாதி சான்றிதழ் மற்றும் அசல் ஆவணங்களை கொடுத்தார். அதோடு இரண்டு ஆண்டு  படிப்புக்கான கட்டணத்தையும் செலுத்தினார். இந்நிலையில் கீர்த்தியால் மேற்கொண்டு படிக்க முடியாத  சூழ்நிலை ஏற்பட்டதால், படிப்பை பாதியில் நிறுத்தினார். பின்னர் தனது அசல் மதிப்பெண் சான்றிதழ், டி.சி உள்ளிட்ட ஆவணங்களை தருமாறு கல்லூரி நிர்வாகத்திடம் கேட்டார்.  ஆனால் கல்லூரி நிர்வாகம் கொடுக்காமல் அலைக்கழித்து வந்துள்ளது. இதையடுத்து கீர்த்தி தஞ்சை மாவட்ட நுகர்வோர் குறை தீர் மன்ற ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை  நுகர்வோர் குறைதீர் மன்ற தலைவர் சேகர், உறுப்பினர் வேலு மணி ஆகியோர் விசாரித்து, கீர்த்தியின் மதிப்பெண் சான்றிதழ் கள், டிசி உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் எந்தவித  நிபந்தனையும் இன்றி ஒப்படைக்குமாறும், கல்லூரி நிர்வாகத் தின் சேவைக் குறைபாட்டுக்காக ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்குமாறும், வழக்கு செலவு தொகையாக ரூ.10,000 என  மொத்தம் ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் இறப்பீடு வழங்குமாறும் கல்லூரி நிர்வாகத்திற்கு உத்தரவிட்டனர். இந்த வழக்கில் வழக்குரைஞர் உமர்முக்தார் ஆஜராகி வாதாடினார்.

உதவி ஆய்வாளருக்கு பணி ஓய்வு பாராட்டு விழா

தஞ்சாவூர், ஆக.2 -  தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் கடற்கரை காவல் நிலைய உதவி ஆய்வாளருக்கு பணி ஓய்வு பாராட்டு  விழா வியாழக்கிழமை நடைபெற்றது.  தமிழ்நாடு காவல்துறையில் 38 வருடங்களாக பல்வேறு  பணிகளில் பணியாற்றி முதல்வர் விருது, அண்ணா விருது  உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்று, அதிராம்பட்டினம் கடற்கரை காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணி யாற்றி வந்த வேம்பு வியாழக்கிழமை பணி ஓய்வு பெற்றதை யொட்டி பாராட்டு விழா நடைபெற்றது.  விழாவிற்கு கடலோரக் காவல் குழும துணைக் கண்கா ணிப்பாளர் முருகன் தலைமை வகித்தார். லஞ்ச ஒழிப்புத் துறை துணைக் கண்காணிப்பாளர் அன்பரசன், கடலோரக்  காவல் குழும ஆய்வாளர் மஞ்சுளா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  விழாவில் மணமேல்குடி காவல் ஆய்வாளர் முத்துக் கண்ணு, குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு ஆய்வாளர் சுபா, சேதுபாவாசத்திரம் கடற்கரை காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுப்பிரமணியன் மற்றும் காவல் துறையினர் வாழ்த்திப் பேசினர். பணி ஓய்வுபெற்ற உதவி ஆய்வாளர் வேம்பு ஏற்புரையாற்றினார்.  

ஜெர்மன் மொழி தேர்வுக்கு பயிற்சி:  எஸ்.சி, எஸ்.டி-யினர் விண்ணப்பிக்கலாம்

அரியலூர், ஆக.2 - தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்  கழகம் (தாட்கோ) மூலம் நடத்தப்படும் ஜெர்மன் மொழி தேர்வுக்கு பயிற்சி பெற விரும்பும் எஸ்.சி, எஸ்.டி-யைச் சேர்ந்த செவிலியர்கள் படிப்பு, பயிற்சி முடித்தவர்கள் விண்ணப் பிக்கலாம் என ஆட்சியர் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளார். தாட்கோ, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகளை அளித்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக, ஜெர்மன் மொழி தேர்வுக் கான பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இப்பயிற்சி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சார்ந்த  பி.எஸ்.சி நர்சிங், பொது நர்சிங் மற்றும் மருத்துவச்சி டிப்ளமோ ஆகிய படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.  21 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு  வருமானம் ரூ.3 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். இப்பயிற்சி 9 மாதங்கள் அளிக்கப்படுகிறது. விடுதியில் தங்கி  படிப்பதற்கான செலவுத் தொகை தாட்கோவால் வழங்கப்படு கிறது. இப்பயிற்சி முடித்தவுடன் தகுதியான நபர்களை பயிற்சி  அளிக்கும் நிறுவனத்தின் மூலம் தேர்வு செய்து, அந்நிறு வனத்தின் சார்பாக ஜெர்மனி நாட்டில், ஆரம்ப கால மாத ஊதியமாக ரூ.2,50,000 முதல் ரூ,3,00,000 வரை வரு வாய் ஈட்ட வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். இப்பயிற்சி பெற தாட்கோ இணையதளத்தில் விண்ணப் பிக்கவும். கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட மேலாளர், தாட்கோ அலுவலகம், அறை எண்.225, இரண்டாவது தளம்,  மாவட்ட ஆட்சியரகம், அரியலூர் என்ற முகவரியிலும், 04329-228315 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு  கொள்ளலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை வழங்க  நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

கரூர், ஆக.2 - தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கரூர் மாவட்டக் குழு கூட்டம் கிருஷ்ண ராயபுரத்தில்   நடைபெற்றது.  கூட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலை வர் கே.கந்தசாமி தலைமை வகித்தார்.   மாவட்டச் செயலாளர் கே.சக்திவேல், மாவட்டப் பொருளாளர் கே.சுப்பிரமணி ஆகி யோர் பேசினர். மாவட்ட குழு உறுப்பி னர்கள் ஏ.நாகராஜன், ஏ.முனியப்பன், டி. இளங்கோவன், பி.ரவிக்கண்ணன்  உள்ளிட்ட  பலர் கலந்து கொண்டனர். கரூர் மாவட்டம், மாயனூர் கதவணைக்கு நிலம் கையகப்படுத்தப்பட்டதில் பாதிக்கப் பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை வழங்காமல் காலம் தாழ்த்தி வருவதை கை விட்டு, உடனடியாக இழப்பீடு தொகை வழங்க தமிழக அரசும், நீர் வளத்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும். க.பரமத்தி, கடவூர் ஒன்றியப் பகுதி களில் விவசாய நிலங்களில் உயர் மின்  அழுத்த பாதையில் மின் கோபுரம் அமைக்கப் பட்டது. அதில் பாதிக்கப்பட்ட விவசாயி களுக்கு இழப்பீடு மற்றும் கூடுதல் இழப்பீடு கேட்டு, பாதிக்கப்பட்ட 63 விவசாயிகள் கடந்த 19 மாதங்களுக்கு முன் மாவட்ட ஆட்சி யரிடம் மனுக்கள் கொடுத்தனர். மேற்கண்ட  மனுக்கள் மீது மாவட்ட நிர்வாகம் நடவ டிக்கை மேற்கொண்டும். சம்பந்தப்பட்ட பவர் கிரீட் நிர்வாகம் இன்று வரை இழப்பீடு  தொகையை வழங்க நடவடிக்கை மேற் கொள்ளவில்லை. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு  தொகை மற்றும் கூடுதல் இழப்பீடு தொகையை வழங்கிட கரூர் மாவட்ட நிர்வாகம் உடனே நடவடிக்கை மேற்கொள்ள  வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாணவிக்கு ஒரே நாளில் கிடைத்த சான்றிதழ்கள்  வட்டாட்சியருக்கு ஆட்சியர் பாராட்டு

தஞ்சாவூர், ஆக.2 - பட்டுக்கோட்டை அருகே, அரசு பள்ளி யில், பத்தாம் வகுப்பு மாணவிக்கு ஒரே நாளில்  சான்றிதழ்களை வழங்கிய வட்டாட்சியரை, மாவட்ட ஆட்சியர் பாராட்டினார். தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே, பழஞ்சூர் கிராமத்தைச் சேர்ந்த முருகன்- வனரோஜா தம்பதியின் மகள் மேகலா (15). புதுக்கோட்டை உள்ளூர் கிரா மத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில்  பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். மேகலா சிறுவயதாக இருக்கும்போது பெற்றோர் இறந்து விட்டனர். தற்போது அவரது பாட்டி  வடுவம்பாள் பராமரிப்பில் வளர்ந்து வரு கிறார். இந்நிலையில், மேகலாவுக்கான பிறப்புச்  சான்று, வருமானச் சான்று, சாதிச் சான்று,  இருப்பிடச் சான்றுகள் சமர்ப்பிக்க வேண்டும்  என பள்ளியில் கேட்டுள்ளனர். ஆனால், மாணவியிடம் அது போன்ற சான்றிதழ்கள் எதுவும் இல்லாத நிலையில், ஆசிரியர்களி டம் விபரத்தை கூறியுள்ளார். இதனால் புதன்கிழமை மாலை 5.30  மணிக்கு தஞ்சாவூர் ஆட்சியர் அலுவல கத்தில், அரசு பள்ளி தலைமையாசிரியர்களுக் கான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில், புதுக்கோட்டை உள்ளூர் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் சம்பந்தம், தனது பள்ளியில் படிக்கும் மாணவி மேகலாவின் நிலையை, ஆட்சியர் பிரியங்கா பங்கஜத்திடம், எடுத்துக் கூறி,  சான்றிதழ்கள் வழங்க கோரிக்கை விடுத்தார். உடனடியாக, பட்டுக்கோட்டை வட்டாட்சி யர் தர்மேந்திராவிடம் பேசி, மாணவிக்கு தேவையான சான்றிதழ்களை வழங்குமாறு ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் அறிவுறுத் தினார். இதையடுத்து, வட்டாட்சியர் தர்மேந்திரா  முயற்சியால், மாணவி மேகலாவுக்குத் தேவையான வருமானச் சான்று, இருப்பிடச்  சான்று, சாதிச் சான்று உள்ளிட்ட சான்றிதழ் கள் உடனடியாக ஏற்பாடு செய்யப்பட்டு, மேகலாவின் பள்ளிக்குச் சென்று வட்டாட்சி யர் தர்மேந்திரா வியாழக்கிழமை  பள்ளி  தலைமை ஆசிரியர் சம்பந்தம் மற்றும் மாணவி மேகலா ஆகியோரிடம் வழங்கி னார். உடனே முயற்சி எடுத்து மாணவிக்கு உரிய சான்றிதழ்களை வழங்கிய வட்டாட் சியர் தர்மேந்திராவை, ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் பாராட்டினார்.