tamilnadu

img

புதிய ஆராய்ச்சியில் அதிக கவனம் செலுத்த வலியுறுத்தல்

வேலூர், செப்.30- புதிய ஆராய்ச்சி, கண்டு பிடிப்புகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று இந்திய ராணுவ அமைச்சரின் அறிவியல் ஆலோசகர் தெரிவித்தார். வேலூர் விஐடி பல்கலைக் கழகத்தில் கிராவிடாஸ் 2022 அறிவுசார் தொழில்நுட்பத் திருவிழா வெள்ளியன்று(செப்.30)தொடங்கியது. விழாவுக்கு வேந்தர் விசுவநாதன் தலைமை தாங்கினார். இந்திய ராணுவ அமைச்சரின் அறிவியல் ஆலோசகர் சதீஷ் ரெட்டி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரை யாற்றினார். அப்போது அவர் பேசிய தாவது:-  இதுபோன்ற நிகழ்ச்சி மூலம் மாணவர்களின் திறன்களை வெளி கொணர முடியும். இது அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 15 ஆண்டுகளுக்கு முன்பாக இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் 5 அல்லது 6 பொறியியல் கல்லூரிகள் மட்டுமே இருந்தன. சில ஆயிரம் பொறியாளர்கள் மட்டுமே உருவாகினர். தற்போது ஒரு ஆண்டுக்கு 14 லட்சம் பொறியாளர்கள் வெளியே வருகிறார்கள். அனைவருக்கும் வேலை வாய்ப்பு உருவாக்க அரசு பங்களிப்பு அளித்து வரு கிறது.  இவ்வாறு அவர் பேசினார்.  வேந்தர் விசுவநாதன் பேசுகையில், “வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் நடைபெறும் கிராவிடாஸ் அறிவுசார் தொழில்நுட்ப திருவிழாவில் விஐடி மாணவர்கள் 10 ஆயிரம் பேர் மற்றும் வெளிநாடு மற்றும் பல்வேறு பல்கலைக் கழகங்களை சேர்ந்த 3 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்கின்றனர். இதில் 140-க்கும் மேற்பட்ட படைப்புகள் வைக்கப் படுகின்றன. உலகில் 5-வது பொருளாதார நாடாக இந்தியா உள்ளது. இந்தியா பணக்கார நாடாக உள்ளது. ஆனால் இந்தி யர்கள் ஏழையாக உள்ள னர் என்றார்.

;