தருமபுரி, மார்ச் 6- காலிப் பணியிடங்களை நிரப்பக்கோரி, மார்ச் 16 ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ள போராட்டத்தில் தருமபுரி மாவட் டத்தில் இருந்து பெருந்திரளானோர் பங் கேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. சிஐடியு மின்வாரிய ஒப்பந்த தொழிலா ளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி விளக்க பேரவை கூட்டம் தருமபுரி சிஐடியு அலுவலகத்தில் நடைபெற்றது. சிஐடியு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாவட்ட தலை வர் தீ.லெனின் மகேந்திரன் தலைமை வகித் தார். மாநில துணைத்தலைவர் பி.ஜீவா, கோட்ட செயலாளர்கள் தருமபுரி வெ.சீனி வாசன், கடத்தூர் கு.ஜெகநாதன், அரூர் ம.காளியப்பன் ஆகியோர் சிறப்புரை யாற்றினர். இக்கூட்டத்தில், மின்வாரியத்தில் பணி புரியும் ஒப்பந்த தொழிலாளர்களை அடை யாளம் கண்டு மின்வாரியமே 2018 ஆம் ஆண்டு பிப்.22 ஆம் தேதி ஏற்பட்ட முத்த ரப்பு ஒப்பந்தத்தின் அடிப்படையில் தினக் கூலியை நேரடியாக வழங்க வேண்டும். திமுக அரசு தனது தேர்தல் அறிக்கையில் பொதுத்துறை நிறுவனங்களில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய் வோம் என கூறியதை நிறைவேற்ற வேண் டும். மின்வாரியத்தில் உள்ள காலிப் பணியி டங்களை நிரப்ப வலியுறுத்தி, மார்ச் 16 ஆம் தேதி சென்னை தலைமை மின்வாரிய அலுவ லகம் முன்பு தர்ணா போராட்டம் நடைபெற உள்ளது. இந்த போராட்டத்தில் தருமபுரி மாவட்டத்தில் இருந்து ஊழியர்கள் பெருந் திரளாக பங்கேற்பது என தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. நிறைவாக, மாவட்ட பொரு ளாளர் மா.ஜெயக்குமார் நன்றி கூறினார்.