tamilnadu

img

பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறிவிட்டோம்!

எடப்பாடி, அக். 4 - பாஜக-வுடனான தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து, வெளியேறிவிட்ட தாக கடந்த செப்டம்பர் 25 அன்று, மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திற்கு பின் அதிமுக அறிவித்தது. எனினும், அதிமுக-வோடு பாஜக தேசியத் தலைமை பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், விரைவில் பாஜக கூட்டணியில் அதிமுக இணை யும் என்றும் எச். ராஜா, வி.பி. துரை சாமி, புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ண சாமி போன்றோர் கூறி வந்தனர்.  ஆனால், பாஜக-வின் கூட்டணியி லிருந்து விலகும் தங்களின் முடிவில் எந்த மாற்றமும் இல்லை; இனிமேல் எந்தச் சூழலிலும் பாஜகவோடு அதி முக கூட்டணி சேராது; 2024 தேர்தலில் புதிய கூட்டணியை அதிமுக உருவாக் கும் என்று அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் கே.பி. முனுசாமி, இரண்டு முறை செய்தியாளர் சந்திப்பு நடத்தி தெளிவுபடுத்தினார். எனினும், அதிமுக - பாஜக கூட்டணி மீண்டும் ஏற்பட உள்ளதாக பாஜகவினர் தொடர்ந்து ஊடகங்களில் செய்தி பரப்பி னர். அதற்கேற்ப பாஜக மாநிலத் தலை வர் அண்ணாமலை தில்லி சென்று, நிதி யமைச்சர் நிர்மலா சீதாராமன், உள் துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோ ரை சந்தித்துப் பேசியதும், மறுநாளே நிர்மலா சீதாராமன் தமிழ்நாட்டின் கோயம்புத்தூருக்கு வந்த நிலையில், இங்கு அவரை அதிமுக மூத்த தலைவ ரான பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட் டோர் நேரில் சந்தித்துப் பேசியதும் பர பரப்பை ஏற்படுத்தியது. அதிமுக தொண்டர்கள் மத்தியிலும் குழப்பத் தை ஏற்படுத்தியது. “இந்நிலையில், பாஜக நிர்வாகி கள் அதிமுக கூட்டணியில் இணைய விருப்பம் தெரிவிப்பது அவர்களின் விருப்பம். ஆனால், நாங்கள் பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறிவிட் டோம்” என்று அதிமுக பொதுச்செய லாளர் எடப்பாடி பழனிசாமியே நேரடி யாக அறிவித்துள்ளார். சேலம் மாவட்டம் எடப்பாடியில் புதன் கிழமையன்று அவர் செய்தியாளர் களைச் சந்தித்தார். அப்போது அவரி டம், பாஜக கூட்டணியில் இருந்து அதி முக வெளியேறிவிட்டது; பாஜக நிர்வாகி கள் அதிமுகவில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளனர்;

எனவே, அதை மறு பரிசீலனை செய்வீர்களா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், “அது அவர்களின் விருப்பம். ஏற்கெனவே நான் தெளிவுபடுத்திவிட்டேன். 25.9.23 அன்று, தலைமைக் கழகச் செயலாளர் கள், மாவட்டச் செயலாளர்கள், நாடாளு மன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர் கள் கலந்துகொண்ட கூட்டம் நடை பெற்றது. அந்தக் கூட்டத்தில், இரண்டு கோடி தொண்டர்களின் உணர்வுகளை அவர்கள் தெரிவித்தார்கள்.  அதன டிப்படையில், ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, பாஜக கூட்டணி யில் இருந்து அதிமுக விலகிக்கொள் கிறது என்றும், தேசிய ஜனநாயக கூட்ட ணியில் இருந்து விலகுவதாகவும் தீர்மா னம் நிறைவேற்றப்பட்டது. அத்தீர்மா னத்தின் அடிப்படையில், அதிமுக பாஜக தலைமையிலான தேசிய ஜனநா யக கூட்டணியில் இருந்து விலகிவிட் டது” என்று கூறினார். அதிமுக, பாஜக தனித்தனியாக கூட் டணி அமைத்து தேர்தலை சந்தித்தால் திமுகவுக்கு எதிரான வாக்குகள் சிதறு வதற்கு வாய்ப்பு உள்ளதே என்ற கேள்வி க்கு, “மக்களுடைய மனநிலை எப்படி இருக்கும் என்று யாருக்கும் தெரியாது. வாக்களித்த பிறகுதான் முடிவு தெரி யும். எங்களைப் பொறுத்தவரை, அதி முக தலைமையில் அமைக்கப்படும் கூட்டணி, புதுச்சேரி உட்பட 40 தொகு திகளிலும் வெற்றி பெறும்” என்று பதி லளித்தார். அப்போது, 2026 சட்ட மன்றத் தேர்தலில் அண்ணாமலையை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க பாஜக அழுத்தம் கொடுத்ததால்தான் அதிமுக, கூட்டணியிலிருந்து வெளி யேறியதா? என்ற கேள்விக்கு “அது தவ றான செய்தி. எங்கள் கட்சியைச் சேர்ந்த  கே.பி.முனுசாமி, அது தவறான செய்தி என்று ஏற்கெனவே கூறிவிட்டார். அப்படியெல்லாம் ஒன்றும் நடக்க வில்லை” என்றார்.