tamilnadu

img

“சாதி, மத, இன, மொழி வட்டத்தில் சிக்காதீர்கள்”

சமூக வலை தளங்களில் மொழி, இனம்,  சாதி, மதம் வட்டத்தில் சிக்  காமல், நம்பிக்கை சார்ந்த  விஷயங்களில் தலை யிடாமல் சமூக வலைத்  தளங்களில் கருத்துக்க ளைப் பதிவிட வேண்டும் என்று விஜய்  மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு அறி வுறுத்தப்பட்டுள்ளது. சென்னை பனையூரில் விஜய் மக்கள்  இயக்கத்தின் சமூக ஊடக பிரிவின் ஆலோ சனைக் கூட்டம் ஆக. 26 அன்று நடைபெற்றது.   இந்த கூட்டத்தில் இயக்கத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த்  பேசுகையில், “வரக்கூடிய காலங்களில் வேறு ஒரு பரிணாமத்தில் செயல்படக் கூடிய முன்னெடுப்புகளை செய்து வரு கிறோம். அதற்காக பல அணிகளுக்கான  கட்டமைப்புகளை ஏற்படுத்தி வருகிறோம். விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் சமூக வலைதளங்களில் மொழி, இனம்,  சாதி, மதம் வட்டத்தில் சிக்காமல் நம்  பிக்கை சார்ந்த விஷயங்களில் தலையிடா மல் பதிவிட வேண்டும். தரம் தாழ்ந்த கருத்துகளை பதிவிடக்கூடாது. நீங்கள்  அளிக்கும் பதில்கள் கருத்தியல் சார்ந்த தாக இருக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.