tamilnadu

img

திமுக சார்பில் மராத்தான் போட்டி

திமுக சார்பில் மராத்தான் போட்டி

கோவை, செப்.14- திமுக முப்பெரும் விழாவை முன்னிட்டு, 10 ஆயிரத் திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட மராத்தான் போட்டி  நடைபெற்றது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் முப்பெரும் விழாவை  முன்னிட்டு, கோவை மாநகர் மாவட்ட திமுக சார்பில், மசக் காளிபாளையம் பாலன் நகர் அருகில் சுற்றுப்புறச் சூழல்,  ரத்ததானம் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி ஞாயிறன்று  நடைபெற்றது. மாநகர் மாவட்டச் செயலாளர் நா.கார்த்திக்  கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் 10 ஆயிரத்துக் கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொது மக்கள் கலந்து கொண்டனர். முடிவில், வெற்றி பெற்றவர்க ளுக்கு பரிசுத்தொகை வழங்கப்பட்டது.