திண்டுக்கல், மார்ச் 20- திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே விருவீட்டில் திமுக தெருமுனை பிரச்சாரக் கூட்டம் திண்டுக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளர் ஐ.பி.செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், வத்தலக்குண்டு வடக்கு ஒன்றியச் செயலாளர் கே.பி.முருகன், தலைமை செயற்குழு உறுப்பினர் கனக துரை, வத்தலக்குண்டு நகரச் செயலாளர் சின்னத்துரை, சேவுகம்பட்டி நகரச் செய லாளர் தங்கராஜ், பட்டிவீரன்பட்டி நகரச் செய லாளர் அருண்குமார், ஒன்றிய அவைத் தலைவர் செல்வராஜ், ஒன்றிய கவுன்சிலர் சக்திவேல், மாவட்ட பிரதிநிதி பொன்னம் பலம், ஊராட்சி செயலாளர் ராமசாமி, விருவீடு ஊராட்சி மன்ற தலைவர் தர்மர், துணைத் தலைவர் ரஞ்சித் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வத்தலக்குண்டு தெற்கு ஒன்றியச் செய லாளர் கனிக்குமார் வரவேற்றார். தலைமை கழக பேச்சாளர் ஈரோடு இளைய கோபால், வத்தலக்குண்டு பேரூராட்சி தலைவர் சிதம்பரம், முன்னாள் மாவட்ட பொருளா ளர் மணி முருகன், முன்னாள் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் ராஜேந்திரன், மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் ஜெயராஜ், சிறுபான்மை பிரிவு மாவட்டத் தலைவர் பிரான்சிஸ், திமுக நிர்வாகிகள் முருகேசன், சகாப்தீன், முத்துப்பாண்டி, கோபால், தேவராஜ், சத்ரியன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். விரு வீடு திமுக கிளைச் செயலாளர் விஸ்வ நாதன் நன்றி கூறினார். கூட்ட ஏற்பாடு களை திமுக வத்தலக்குண்டு தெற்கு ஒன்றிய நிர்வாகிகள் செய்திருந்தனர்.