tamilnadu

img

திமுக கூட்டணியில் இணைந்தது தேமுதிக!

திமுக கூட்டணியில் இணைந்தது தேமுதிக!

சென்னை, பிப். 19 - திமுக தலைமையிலான மதச்சார் பற்ற முற்போக்குக் கூட்டணியில், தேமுதிக இணைந்தது. தமிழக முதல்வரும் திமுக தலை வருமான மு.க. ஸ்டாலினை, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, பொருளாளர் எல்.கே. சுதீஷ் உள்ளிட் டோர் சென்னை அண்ணா அறிவால யத்தில் வியாழனன்று நேரில் சந்தித்தனர்.  அதனைத் தொடர்ந்து, செய்தி யாளர்களைச் சந்தித்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, 2026 சட்டப்பேரவைத் தேர்தலை, திமுக தலை மையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியுடன் இணைந்து சந்திக்கும் என்று அறிவித்தார். தேமுதிக மாவட்டச் செயலாளர் கள் மற்றும் தொண்டர்களின் ஒரு மித்த விருப்பம் மற்றும் கட்சியின் எதிர் காலத்தைக் கருத்தில் கொண்டு, திமுக கூட்டணியில் இணைந்துள்ளதாகவும், 2026 சட்டமன்றத் தேர்தலில் மு.க. ஸ்டாலின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி 200-க்கும் அதிகமான தொகுதிகளை வென்று மீண்டும் ஆட்சியமைக்கும் என்றும் தெரிவித்தார். முன்னதாக, தேசிய ஜனநாயக கூட்ட ணியில் தான், தேமுதிக இணையும் என்று செய்திகள் வெளியாகி வந்த நிலையில், திடீர் திருப்பமாக திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்தது, அதிமுக - பாஜக கட்சிகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி,  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், மதிமுக, விசிக, ஐ.யு.எம்.எல்., ம.ம.க.,  த.வா.க., கொ.ம.தே.க. உள்ளிட்ட கட்சி களை உள்ளடக்கிய திமுக கூட்டணி 45 சதவிகிதத்திற்கு அதிகமான வாக்குகளைப் பெறும்; அபார வெற்றி யைப் பெறும் என்று கருத்துக் கணிப்பு கள் கூறியிருந்த நிலையில், தேமுதிக வரவால் திமுக தலைமையிலான கூட் டணி மேலும் வலுவடைந்திருப்ப தாகவும், அரசியலில் தேமுதிக தமது  நிலையை தக்கவைத்துக் கொள்வ தற்கான வாய்ப்பு கிடைத்துள்ளதாக வும் அரசியல் நோக்கர்கள் தெரிவிக் கின்றனர்.