tamilnadu

img

கீழடி அகழாய்வில் மனித எலும்புக்கூடு கண்டுபிடிப்பு....

மதுரை:
தமிழர்களின் நாகரீகத்தை உலகிற்கு பறை சாற்றும் கீழடியில் ஏழாம் கட்ட அகழ்வாராய்ச்சிப் பணிகள் நடைபெற்று வருகிறது. கீழடி அருகே உள்ள கொந்தகை பகுதியிலும் அகழாய்வு பணிப் நடக்கிறது. இங்கு நான்கு குழிகள் தோண்டப்பட்டு பத்து முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டன. அதில் ஒரு முதுமக்கள் தாழி சேதாரமில்லாமல் முழு அமைப்புடன் கிடைத்தது. அதையும் சேர்த்து இரண்டு முதுமக்கள் தாழிகளை ஆய்வு செய்ததில் அதனுள்ளே மனித மண்டை ஓடு, விலா எலும்புகள், மூட்டு எலும்புகள், கை- கால் விரல் எலும்புகள், இரும்பு வாள், கூம்பு வடிவ கிண்ணங்கள், கருப்பு, சிவப்பு பல வண்ணம் கொண்ட மண் சட்டிகள் இருந்தன. மற்ற முதுமக்கள் தாழிகள் இன்னும் ஆய்வு செய்யப்படவில்லை.இந்த நிலையில் தொடர்ந்து அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்றபோது மனித முழு உருவ எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டது. இந்த முழு உருவ எலும்புக்கூடு முழுமையான ஆய்வுக்கு பிறகு தான் ஆணா -பெண்ணா எனவும் மேலும் எந்த நூற்றாண்டு காலத்தை சேர்ந்தது என்பது தெரியவரும்.

;