திருப்புவனம், செப். 25- சிவகங்கை மாவட்டம் கீழடியில் தமிழ்நாடு தொல் லியல் துறை சார்பில் 9-ஆம் கட்ட அகழாய்வு கீழடி, கொந்தகை ஆகிய இரு தளங் களில் கடந்த ஏப்ரல் 6இல் தொடங்கி நடந்துவருகிறது. கீழடியில் ஏற்கனவே ஆறாம் கட்ட அகழாய்வின் போது பன்றி உருவம் பதித்த சூதுபவளம் கண்டறி யப்பட்டு கீழடி அருங்காட்சி யகத்தில் காட்சிப்படுத்தப் பட்டுள்ளது. அதன்பின் கடந்த 8-ஆம் கட்ட அகழா ய்வில் 80-வது முதுமக்கள் தாழியினுள் 74 செந்நிறம் கொண்ட சூதுபவளங்கள் கண்டறியப்பட்டன. தற் போது கிடைத்த இரண்டு சூதுபவளங்களில் ஒன்றில் மேலும் கீழும் தலா இரண்டு கோடுகளும் நடுவில் அலை கள் போன்ற குறியீடும் வெண்மை நிறத்தில் உள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒன்பதாம் கட்ட அகழா ய்வில் முதன் முறையாக அழகிய வேலைப்பாட்டுடன் கூடிய சூதுபவளம் கண்ட றியப்பட்டது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. கொந்தகை தளத்தில் 9-ஆம் கட்ட அகழாய்வில் இரண்டு குழிகளில் இது வரை 26 முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டு அதில் 14 தாழிகளில் உள்ள மண்டை ஓடுகள், சுடுமண் பானைகள் உள்ளிட்ட பொருட்கள் வெளியே எடுக்கப்பட்டு வரு கின்றன. முதுமக்கள் தாழி யினுள் உள்ள எலும்புகள் மற்றும் சுடுமண் பானை களில் உள்ள உணவுப் பொருட் களை மதுரை காமராஜர் பல்கலைக் கழக மரபணு பிரிவு ஆய்வு செய்து வரு கிறது. கொந்தகை தளத்தில் இதுவரை நடந்த அகழாய் வில் மொத்தம் 158 முது மக்கள் தாழிகள் கண்டறி யப்பட்டுள்ளன. ஞாயிறன்று 145வது முதுமக்கள் தாழி யினுள் உள்ள பொருட் களை வெளியே எடுக்கும் பணி நடந்து வந்தது. இதில் 17.5 செ.மீ ஆழத்தில் ஆய்வு செய்த போது தாழியினுள் 1.4 செ.மீ நீளமும், இரண்டு செ.மீ விட்டமும் கொண்ட இரண்டு சூதுபவளங்கள் (கார்னிலியன்) கண்டறியப் பட்டுள்ளது.