கடந்த 2 வாரங்களாக டெங்கு பாதிப்பு அதிகரிப்பு
சென்னை: கடந்த இரு வாரங்களாக டெங்கு பாதிப்பு அதி கரித்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். வடகிழக்கு பருவமழை முன்னேற்பாட்டுப் பணிகள் மற்றும் தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, தமிழ் நாடு முழுவதும் உள்ள மருத்துவத் துறை, நகராட்சி நிர்வாகத் துறை, ஊரக வளர்ச்சித் துறை மற்றும் முக்கிய சேவைத் துறை அலுவலர்களுடன் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கலந்தாலோசனைக் கூட்டம் நடத்தினார். அதனைத் தொடர்ந்து, அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “தமிழகத்தில் 2025 ஜனவரி 1 முதல் தற்போது வரை 15,796 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். 8 பேர் உயிரிழந்துள்ள னர். கடந்த இரு வாரங்களாக டெங்கு பாதிப்பு அதிகரித்த நிலை யில், தமிழக அரசின் தொடர் நடவடிக்கைகளால் டெங்கு பாதிப்பு குறைக்கப்பட்டுள்ளது” என்றார். டெங்கு காய்ச்சலால் ஒரு இறப்புகூட நேரக்கூடாது என்பது தான் தமிழக அரசின் முதன்மையான நோக்கம் என்று கூறிய அமைச்சர், பொதுமக்களும் தேவையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
6 நாட்களுக்கு மழை வாய்ப்பு: தமிழகத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை
சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 6 நாட்கள் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதால் வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு அரபிக் கடல் பகுதிகளில் நிலவிய சக்தி புயல், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு குறைந்துள்ளது. இது செவ்வா யன்று மேலும் தென்கிழக்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அதே பகுதிகளில் நிலவுகிறது. இது துவார காவிலிருந்து மேற்கு-தென்மேற்கே சுமார் 970 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. தென்மேற்கு வங்கக் கடலில் தமிழக கடலோர பகுதிகளுக்கு அப்பால் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், தேனி, திண்டுக்கல், விருதுநகர், மதுரை, சிவகங்கை, இராம நாதபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சா வூர், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, சேலம் மாவட்டங்க ளில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. புதனன்று நீலகிரி, கோயம் புத்தூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
‘பாஜகவின் பயணம் எடுபடாது’
சென்னை: பாஜகவின் பயணம் ஒரு நாளும் தமிழரின் பயணமாக அமையாது, அது வடநாட்டு பயணம்தான் என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். பாஜக நடத்தும் எந்த ஊர்வலமும் தமிழர்களுக்காகவோ, தமிழர் நல னுக்காகவோ இருக்க வாய்ப்பில்லை என்றார் அவர்.
தாமதமின்றி நிதி ஒதுக்க வலியுறுத்தல்
சென்னை: கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க் கைக்கான நிதியை தாமதமின்றி ஒன்றிய அரசு ஒதுக்க வேண் டும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச் சர் அன்பில் மகேஸ் வலியுறுத்தியுள்ளார். கல்வி உரிமைச் சட்டத் தின்கீழ் மாணவர் சேர்க்கைக்கு விண் ணப்பிக்கும் இணைய தளம் முடங்கியுள்ள தாகவும், இதனால் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க அவ காசத்தை நீட்டிப்பது குறித்து முடிவு எடுக்கப் படும் எனவும் அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
காவல்துறை அதிகாரி கைது
சென்னை: நீதி பதியை விமர்சித்த ஓய்வுபெற்ற காவல் துறை அதிகாரி வரத ராஜன் சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நேதாஜி மக்கள் கட்சி என்ற பெயரில் கட்சி நடத்தி வருபவர் ஓய்வு பெற்ற காவல் அதிகாரி வரதராஜன். கரூரில் 41 பேர் உயிரிழந்த விவ காரத்தில் நீதிபதியை விமர்சித்ததே இவர் கைதுக்கு காரணமா கும். இதற்கு முன்பு, நீதி பதியை விமர்சித்த 4 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்த நிலையில், இப்போது வரதராஜன் கைது செய் யப்பட்டுள்ளார்.