tamilnadu

img

அடிப்படை தேவைகளை நிறைவேற்றக்கோரி ஜனநாயக மாதர் சங்க ஆர்ப்பாட்டம்

அடிப்படை தேவைகளை நிறைவேற்றக்கோரி  ஜனநாயக மாதர் சங்க ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை, ஜூலை 29- திருவண்ணாமலை மாவட்டம், பெரண மல்லூர் ஒன்றியம் அரியாபாடி கிராம மக்க ளின் அடிப்படைத் தேவைகளை நிறை வேற்றக் கோரி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. அரியாபாடி கிராமத்திற்கு தொலைவில் உள்ள ஆனைபோகி ஆரம்ப சுகாதார நிலை யத்தில் அரியபாடி கிராமம் இணைக்கப் கட்டுள்ளதை மாற்றி, அருகில் உள்ள பெர ணமல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இணைக்க வேண்டும், அரியபாடி நிதியுதவிப் பள்ளிக்கு போதிய கட்டிடம் கட்ட வேண்டும், கட்டி முடிக்கப்பட்ட அரியா பாடி நியாய விலைக் கடையை செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும், அரியாபாடி காலனி சுடுகாட்டுக்கு பாதை அமைக்க வேண்டும், நூறு நாள் வேலைத் திட்டப் பயனாளிகளுக்கு சட்டப்படி யான கூலி வழங்கி, வேலையை இடை நிறுத்தாமல் தொடர்ந்து வழங்க வேண்டும், நகர பேருந்து தடம் எண் 13, 5 ஆகிய வற்றை அரியாபாடி கிராமத்திற்கும் வந்து செல்லுமாறு விரிவுபடுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறை வேற்றக் கோரி பெரணமல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாதர் சங்கத்தின் இணைச் செயலாளர் அன்பரசி தலைமை தாங்கினார். கோரிக்கைகளை விளக்கி ஒன்றியத் தலைவர் எஸ்.முனி யம்மாள், சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பெரணமல்லூர் சேகரன், ஒன்றியச் செயலாளர் பிரபாகரன், அரியாபாடி கிளைச் செயலாளர் சரஸ்வதி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றியத் தலைவர் பெருமாள், அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாது காப்போர் நல சங்கத்தின் ஒன்றிய பொருளாளர் பாண்டுரங்கன், தமுஎகச துணைத் தலைவர் ராஜ சேகரன், கட்டுமானத் தொழிலாளர் சிஐ டியு செயலாளர் முருகன், மலை வாழ் மக்கள் சங்கத்தின் நிர்வாகி சந்திரிகா, தரணி உள்ளிட்டோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தின் முடிவில் துறை அலு வலர்களான வட்டார மருத்துவ அலுவலர், வட்டாரக் கல்வி அலுவலர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆகியோரிடம் நிர்வாகிகள் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.