அதிக பாரம் ஏற்றிச்செல்லும் வாகனங்களால் ஆபத்து
சேலம், ஜூலை 13- அளவுக்கு அதிகமாக வைக்கோல் பாரம் ஏற்றிச்செல்லும் வாகனங்களால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதால், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள் ளது. சேலம் மாவட்ட கிராமப் பகுதிகளில் பெரும்பாலானோர் விவசாயத்தை பிரதான தொழிலாகக் கொண்டுள்ளனர். கடந்த இரு மாதங்களாக போதிய மழையில்லாததால் கால்நடைகளுக்கான பசுந்தீவனங்கள் போதி யளவில் விளையவில்லை. இதனால், வைக்கோலை கொள்முதல் செய்வதில் கால் நடை வளர்க்கும் விவசாயிகளும், பால் உற்பத்தியாளர்களும் கவனம் செலுத்தி வருகின்றனர். திருச்சி, பெரம்பலூர், அரிய லூர், கள்ளக்குறிச்சி, கடலூர், திருவண்ணா மலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தற்போது நெல் அறுவடை முடிந்துள்ள நிலை யில், விவசாயிகள் சேகரித்து வைத்திருக் கும் வைக்கோல் கட்டுகளை கொள்முதல் செய்யும் வியாபாரிகள் லாரி, பிக்கப் வேன் உள்ளிட்ட கனரக வாகனங்களில் கொண்டு சென்று கறவை மாடுகள் வளா்க்கும் விவ சாயிகளுக்கு விற்பனை செய்து வருகின்ற னர். வாகனங்களின் முகப்பு மற்றும் பின்பகுதி களில் கூடுதலாக இரும்புச் சட்டங்களை பொருத்தி, வாகனங்களின் உயரத்தைவிட அதிக உயரத்திலும், வாகனத்தின் இருபுற மும் வெளியில் நீட்டிக்கொண்டு இருக்கும் வகையிலும் அளவுக்கு அதிகமாக வைக் கோல் கட்டுகளை ஏற்றிச் செல்கின்றனர். இத னால், எதிரே வரும் வாகனங்களில் மோதி யும், சாலையின் குறுக்கே செல்லும் தாழ் வான மின் கம்பிகளில் உரசியும் விபத்து ஏற் படும் அபாயம் உள்ளது. எனவே இது குறித்து போக்குவரத்து காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ள னர்.