லேவில் ஊரடங்கு தளர்வு
புதன்கிழமை அன்று (செப்., 24) யூனியன் பிரதேசமான லடாக்கிற்கு மாநில அந்தஸ்து கோரி லே நகரில் நடைபெற்ற போராட்டத்தில் திடீரென வன்முறை வெடித்தது. இந்த வன்முறை சம்பவங்களில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர். 70க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். மேலும் போராட்டத்தை தூண்டியதாக தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கால நிலை ஆர்வலர் சோனம் வாங்சுக் கைது செய்யப்பட்டு, ஜோத்பூர் சிறையில் (ராஜஸ்தான்) அடைக்கப்பட்டார். இந்த வன்முறையை தொடர்ந்து புதன்கிழமை மாலை லே மாவட் டத்திற்கு, அம்மாவட்ட ஆட்சியர் 163 தடை (ஊரடங்கு) உத்தரவு பிறப்பித்தார். இந்த ஊரடங்கு காலம் செவ்வாய்க்கிழமை அன்று காலை 10 மணி முதல் 7 மணி நேர மாக (24 மணிநேரத்தில் 7 மணிநேர தளர்வு) தளர்த்தப்பட்டது. இந்த லே நக ரில் தளர்வால் சந்தைகள், கடைகள் படிப் படியாக மீண்டும் திறக்கப்பட்டன. முன்ன தாக திங்கள்கிழமை மாலை 4 மணி முதல் 2 மணி நேரம் கட்டுப்பாடுகள் தளர்த்தப் பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.