நாமக்கல், ஜூலை 12- பள்ளிப்பாளையம் ஒன்றியம் ஓடப் பள்ளி அக்ரஹாரம் ஊராட்சி 3 ஆவது வார்டு இடைத்தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் ஜெகதீஷ் சாவி சின்னத்தில் போட்டி யிட்டு வெற்றி பெற்றார். நாமக்கல் மாவட்டம். பள்ளிப்பாளை யம் ஒன்றியம் ஓடப்பள்ளி அக்ர ஹாரம் ஊராட்சி 3 ஆவது வார்டு இடைத் தேர்தலில் பாரதிநகர் சமுதாயக் கூடத்தில் நடைபெற்றது. மொத்த முள்ள 446 வாக்குகளில் 372 வாக்கு கள் பதிவாகின. வாக்கு எண்ணிக்கை அலமேடு பகுதியில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. 372 வாக்குகளில் ஐந்து செல்லாத வாக்குகளாக அறிவிக்கப் பட்டு மொத்தம் 367ல் 190 வாக்குகள் பெற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பா ளர் ஜெகதீஷ் வெற்றி பெற்றார். வெற்றி பெற்ற ஜெகதீஷ்க்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வாழ்த்துக்களை தெரிவித்தனர். வெற்றியைத் தொடர்ந்து, பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். ஓடப்பள்ளி அக்ரஹாரம் ஊராட்சி 3 ஆவது வார்டில் தொடர்ச்சியாக ஆறா வது முறையாக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினர் வெற்றிபெற்று வரு கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.