tamilnadu

img

கொரோனா காலத்தில் மின் கட்டணக்கொள்ளை 73 மையங்களில் சிபிஎம் கண்டன ஆர்ப்பாட்டம்

நாகர்கோவில், ஜுன் 5- மத்திய மாநில அரசுகள் அறிவித்த கொரோனா கால ஊரடங்கால் வருவாய் இழந்து தவிக்கும் மக்களிடம் தாறுமாறாக மின்கட்டணம் வசூலிப்பதற்கு எதிராக குமரி மாவட்டத்தில் 73 மையங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வெள்ளியன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  உலகம் முழுவதும் கோவிட் 19 தொற்று கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த நோய் தொற்றால் தங்கள் நாட்டு  மக்களுக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கல்கள், பாதிப்புகளை சரி செய்ய மற்ற நாடுகள் முயற்சித்து வருகின்றன. ஆனால் இந்தியாவில் மத்திய பாஜக அரசு கோவிட் 19 தொற்றால் வாழ்வாதாரம் இழந்து வாடும் நாட்டு மக்களின் பைகளில் இருப்பதையும் பிடுங்கி கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கொடுக்கும் வகையில் மின்சார சட்டம் 2020 ஐ கொண்டுவந்துள்ளது. மத்திய அரசின் கொத்தடிமையாக செயல்படும் மாநில அதிமுக அரசும் மறைமுகமாக மின்கட்டணத்தை உயர்த்தி மக்களை வஞ்சித்து வருகிறது. இந்நிலையில் அண்மையில் நடந்த குமரி மாவட்ட சிபிஎம் வட்டார செயலா ளர்கள் கூட்டத்தில் மின் கட்டண கொள் ளைக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் 73 மையங்களில் வெள்ளி யன்று (ஜுன் 5) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மின்சார  மசோதாவை ரத்து செய்ய வேண்டும், இலவச மின்சாரம் தொடர வேண்டும், மின்கட்டணம் உயர்த்தக் கூடாது, மின்துறையை  தனியாருக்கு வழங்க கூடாது என மத்திய மாநிலக் அரசு களை ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர். 

கோவிட் 19 தொற்று தடுப்பு ஊரடங்கு காலத்திற்கு வீட்டிற்கான மின் உபயோ கத்தில் 300 அலகை மானியமாக வழங்க வேண்டும், மின்சார அலகு கணக்கீட்டில் உள்ள குறைபாடுகளை நீக்கிட வேண்டும், விவசாயிகளுக்கான இலவச மின்சா ரத்தை தொடர்ந்து வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும், மத்திய அரசின் மின்சார கொள்கை அவசர சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கை கள் வலியுறுத்தப்பட்டன. சுங்கான்கடை பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, எஸ்.விஜி தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்.முருகேசன் பேசினார். கருங்கல் பேருந்து நிலையம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, வட்டார குழு உறுப்பினர் ராஜா தலைமை தாங்கினார்.வட்டார செய லாளர் சாந்தகுமார் பேசினார். இதில், மரிய ராஜ், ரவிக்குமார், ஸ்மைல் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஈத்தாமொழி பகுதி யில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, தாமோ தரன் தலைமை வகித்தார். வட்டார செயலா ளர் எஸ்.டி.ராஜகுமார், வட்டார குழு உறுப்பி னர் சாகுல் ஹமீது ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர். கீழ கிருஷ்ணன்புதூர் மின்வாரிய அலு வலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தி ற்கு மனோகரன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்.எஸ். கண்ணன் பேசினார். தக்கலை தாலுகா அலுவலகம் முன்   நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு சிம்சன் தலைமை வகித்தார். மாவட்ட குழு உறுப்பினர் சந்திர கலா, அரங்க சாமி  நல்லதம்பி  ஸ்டெல்லா ஆகியோர் கலந்து கொண்டனர். மூலச்சல்  மின்வாரிய அலுவலகம்  முன்  நடைபெற்ற ஆர்ப்பாட்டத் த்திற்கு  பிரைட் தலைமை  தாங்கினார். வட்டார செயலாளர் சுஜா  ஜாஸ்பின், அரங்க சாமி ஆகியோர் பேசினர்.

வட்டார குழு உறுப்பினர் ஜான்  சௌந்தர ராஜன்,   ராஜா   ஆகியோர் கலந்து கொண்ட னர்.  அழகிமமண்டபம் சந்திப்பில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, ஷாஜகான் தலைமை வகித்தார். பீர் முகம்மது,  ராஜன், தேவதாஸ்,  காளி பிரசாத் ஆகியோர் கலந்து கொண்டனர். கோழிப்போர்விளை யில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, நாகப்பன் தலைமை வகித்தார். ஸ்மைல் பேசினார். சரோஜா, தாஸ், மணி  கலந்து கொண்டனர்  கொல்லங்கோடு வட்டா ரக்குழு சார்பில் கொல்லங்கோடு மின்  அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.விஜயமோகன் தலைமை வகித்தார். கண்ணநாகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு வட்டார செயலாளர்  அஜித் குமார் தலைமை வகித்தார். தடிக்காரன்கோணம் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வட்டார செய லாளர் எஸ்.மிக்கேல் தலைமை வகித்தார். காங்கரை பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு, வட்டார செயலாளர் வில்சன் தலைமை வகித்தார். மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.ரவி பேசினார். மேலும், குறும்பனை, சுவாமியார் மடம், மேக்கா மண்டபம், பெருஞ்சிலம்பு, முள்ளங்கினாவிளை, திப்பிறமலை, அழகியபாண்டியபுரம், ஆரல்வாய்மொழி, முட்டைக்காடு, திக்கணங்கோடு, புதுக்கடை உட்பட மாவட்ட முழுவதும் 73 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

;