tamilnadu

img

சாமி கும்பிட கோவிலுக்குள் சென்ற தலித் இளைஞர்கள் மீது கொடூரத் தாக்குதல்

மயிலாடுதுறை, மே 31-  மயிலாடுதுறை மாவட் டம் குத்தாலம் ஒன்றியம் பெரம்பூர் அருகேயுள்ள சேத்தூர் கிராமத்தில் அனைத்து தரப்பு மக்க ளுக்கும் பொதுவான கோ வில் திருவிழா ஊர்வலத்தில் சாமி சிலை தூக்கிய தலித் இளைஞர்கள் மீது சாதி ஆதிக்க சக்தியினர் கொடூர தாக்குதலில் ஈடுபட்டனர்.  சேத்தூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீ நித்யகல்யாணி மாரியம்மன் கோவிலின் தீமிதி திருவிழா கடந்த வெள்ளியன்று நடை பெற்றது. திருவிழா முடிந்து சாமி கும்பிடுவதற்காக கோவிலுக்கு சென்ற தலித் சமூகத்தை சேர்ந்த சேத்தூர் கீழக்காலனியில் வசிக்கும் விக்னேஷ், யோகன்ராஜ், ஆனந்தராஜ், விஜயராஜ், சுபாஷ் ஆகியோரை வழி மறித்த சாதி ஆதிக்க வெறி கொண்ட பாலமுருகன், அபி மன்யூ, சரவணன், மணி கண்டன், பாலசுப்ரமணியன், ராஜேஷ் உள்ளிட்ட நபர்கள் சாதி பெயரை குறிப்பிட்டு, இழிவுபடுத்தி, கொடூரமாக தாக்கியுள்ளனர். ஏற்கனவே மறைத்து வைத்திருந்த பயங்கர ஆயுதங்களையும் எடுத்து கொலை செய்யும் நோக்கில் சரமாரியாக தாக்கியுள்ளனர்.  இத்தாக்குதலில் விக்னேஷ் உள்ளிட்ட இளை ஞர்கள் படுகாயமடைந்து, மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில், காவல் துறையினர் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் மீதே பொய்யான வழக்குப்பதிவு செய்துள்ளனர். குறிப்பாக படுகாயங்களுடன் மருத் துவமனையில் சிகிச்சையி லிருந்த விக்னேஷை மருத்துவரின் டிஸ்சார்ஜ் இல்லாமலேயே காவல் துறையினர் வலுக்கட்டாய மாக தூக்கிச்சென்று கைது செய்து சிறையிலடைத்துள் ளனர். 

சாதிவெறியர்களுக்கு ஆதரவாக செயல்படும் காவல்துறை, சேத்தூர் கிரா மத்தில் தொடர்ந்து சாதி பிரச்சனையை ஏற்படுத்தி வருவதோடு, சில வருடங் களுக்கு முன்பு கூலிப்படை யினரை ஊருக்குள் அழைத்து வந்து தலித் இளை ஞர்களை தாக்கிய ஊராட்சி மன்ற தலைவரான மணி கண்டன் மற்றும் அவரது தந்தையும் முன்னாள் ஊராட்சி தலைவருமான ராஜாராமன் ஆகியோரே தற்போது நடந்துள்ள பிரச்ச னைக்கும் பின்புலமாக இருந்து வருகின்றனர் . 

மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம்

சேத்தூர் கிராமத்தில் நடந்தேறியுள்ள இச்சம்பவத் திற்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மயிலாடு துறை மாவட்டக்குழு கடும் கண்டனத்தை தெரி வித்துள்ளது. தலித் இளைஞர்களை தாக்கியதற்கு நீதிக்கேட்டு வந்த நிலையில் பாதிக்கப்  பட்டவர்கள் மீதே பொய்யான வழக்குப்பதிவு  செய்தது குறித்து மயிலாடு துறை மாவட்ட துணை  காவல் கண்காணிப்பாள ரிடம் நேரில் பேசுவதற்காக கட்சியின் மாநிலச் செயற் குழு உறுப்பினர் கே.சாமு வேல்ராஜ், மாவட்டச் செயலாளர் பி.சீனிவாசன், மாவட்டச் செயற்குழு உறுப் பினர்கள் ஜி.ஸ்டாலின், எஸ்.துரைராஜ், ஏ.ரவிச்சந்திரன், டி.சிம்சன், சி.விஜயகாந்த், ஜி.வெண்ணிலா, கே.பி.மார்க்ஸ் மற்றும் மாவட்டக் குழு உறுப்பினர்கள், ஒன்றி யக்குழு உறுப்பினர்கள், கிளை செயலாளர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் மாலை 3 மணியிலிருந்து காத்திருந்து இரவு 7 மணி யாகியும் டி.எஸ்.பி வராத தால், டிஎஸ்பி அலுவலகத் தை முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

திட்டமிட்டு சாதிவெறி யோடு தாக்குதலில் ஈடுபட்ட வர்கள் மீது உரிய வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும், தலித் இளை ஞர்கள் மீதான பொய்வழக் கை ரத்து செய்யவேண்டும். சாதி ஆதிக்க சக்தியினருக்கு  ஆதரவாக செயல்படும், பெரம்பூர் காவல் ஆய்வா ளர் சந்திரா உள்ளிட்ட அதி காரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலி யுறுத்தி நடைபெற்ற போராட்டத்தையடுத்து காவல்துறை அதிகாரிகளு டனான பேச்சுவார்த்தைக்கு பின்னர் போராட்டம் கைவிடப்பட்டது.  போராட்டம் குறித்து கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.சாமுவேல் ராஜ் கூறும் போது, தலித் இளைஞர்  விக்னேஷ் மீதான பொய்வழக்கை ரத்து செய்வ தாகவும், தலித் மக்களுக்கு எதிராக செயல்படும் பெரம்பூர் காவல் ஆய்வா ளர் சந்திரா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,  சாதி வெறி தூண்டுதலில் தொட ர்ந்து ஈடுபடும் ஊராட்சி தலை வர் மணிகண்டன் உள்ளிட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேச்சுவார்த்தையில் முன்வைத்த கோரிக்கை மீது  இரு தினங்களில் நட வடிக்கை எடுப்பதாக டி.எஸ்.பி.உறுதியளித்துள்ளார். அலட்சியப்படுத்தினால் மீண்டும் மாபெரும் போரா ட்டத்தை நடத்துவோம் எனத் தெரிவித்தார்.

;