கோவை, பிப். 4 – நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் ஏற்பட்ட உடன்பாட்டின்படி கோவை மாநக ராட்சியில் 5 வார்டுகள், நகராட்சிகளில் 5 வார்டு, பேரூராட்சிகளில் 16 வார்டுகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடுகிறது. கோவை மாநகராட்சி கோவை மாநராட்சி12 ஆவது வார்டில் வி.இராமமூர்த்தி, 24 ஆவது வார்டில் ஆர்.பூபதி, 13 ஆவது வார்டில் என்.சுமதி, 28 ஆவது வார்டில் கண்ணகி ஜோதிபாசு, 47 ஆவது வார்டில் இரா.செல்வம் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இதேபோன்று கோவை மாவட்டத்திற்கு உட்பட்ட நகராட்சிகளில் வால்பாறை 12 ஆவது வார்டில் பி.பரமசிவம், காரமடை வட்டம் 1 ஆவது வார்டில் ஆர்.பிரியா மற்றும் மதுக்கரை, கருமத்தம்பட்டி ஆகிய தொகுதிகளிலும், பேரூராட்சிகளில்பெரியநாயக்கன்பாளையம் 8 ஆவது வார்டில் என்.சிவராஜ், 13 ஆவது வார்டில் கே.ரேவதி, 1 ஆவது வார்டில் பி.உமாதேவி, இடிகரை 8 ஆவது வார்டு கே.சௌந்திராஜன், 13 ஆவது வார்டு கே.கற்பகம், வேட்டைக் காரன்புதூர் 7 ஆவது வார்டில் துரைசாமி (எ) பழனிச்சாமி, 15 ஆவது வார்டில் சாத்துக்குட்டி, 18 ஆவது வார்டில் எஸ்.சரிதா, இருகூர் 8 ஆவது வார்டில் எஸ்.ஸ்டாலின்குமார், 3 ஆவது வார்டில் ராஜேஸ்வரிசண்முகம், ஆலந்துறை 15 ஆவது வார்டு பி.வெண்ணிலா, ஒத்தக் கால் மண்டபம் 5 ஆவது வார்டு எம்.பழனிச்சாமி, செட்டிபாளையம் 8 ஆவது வார்டு ஏ.அன்னக்கொடி, சூலூர் 7 ஆவது வார்டு ஏ.வேலுச்சாமி, கோட்டூர் 21 ஆவது வார்டு பி.மாரிமுத்து மற்றும் வெள்ள ளூர் உள்ளிட்ட தொகுதிகளில் திமுக தலை மையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் தொகுதி உடன்பாடு ஏற்பட்டு களமிறங்கி உள்ளனர்.