மதுரை, மார்ச் 12- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில 23-ஆவது மாநாடு மதுரையில் மார்ச் 30,31 மற்றும் ஏப்ரல் 1 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. மாநாட்டின் முன்னோட்ட நிகழ்வாக “மொழி உரிமை; மாநில உரிமை” என்ற தலைப்பில் சிறப்புக் கருத்தரங்கம் வெள்ளியன்று நடைபெற்றது. இந் நிகழ்ச்சியை மாநாட்டு வரவேற்புக்குழு சார்பில் கட்சியின் மதுரை மேற்கு ஒன்றி யக்குழு ஏற்பாடு செய்திருந்தது. இக்கருத்தரங்கிற்கு மாநில செயற் குழு உறுப்பினர் மதுக்கூர் இராமலிங்கம் தலைமையேற்றார்.மாநிலக்குழு உறுப் பினர் சு.வெங்கடேசன் எம்.பி. துவக்க வுரையாற்றினார். பேராசிரியர் அருணன், ஆழி.செந்தில்நாதன் ஆகியோர் கருத்துரையாற்றினர். மாநிலக்குழு உறுப்பினர்கள் சி.ராம கிருஷ்ணன், இரா.விஜயராஜன், எஸ். கே.பொன்னுத்தாய், எஸ்.பாலா, மாவட்டச் செயலாளர்கள் கே.ராஜேந்தி ரன் (புறநகர்). மா.கணேசன் (மாநகர்), மேற்கு ஒன்றியச் செயலாளர் பி.ஜீவா னந்தம், மாவட்டக்குழு உறுப்பினர்கள் மலர்விழி, பாலகிருஷ்ணன், ஒன்றியக் குழு உறுப்பினர் எஸ்.சரஸ்வதி உட்பட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்தக் கருத்தரங்கம் கலைஞர் அரசால் “நீராருங் கட லொடுத்த...”பாடல் தமிழ்த்தாய் வாழ்த்தாக அங்கீகரிக்கப்பட்ட நாளில் (1970 மார்ச் 11) நடைபெற்ற நாளில் நடைபெற்றது என்பது குறிப்பிடத் தக்கது.