நாகர்கோவில், ஜூன் 19- இந்திய ஜனநாயக வாலி பர் சங்கமும் ஒயிட் மெம்மோ ரியல் ஹோமியோ மருத்துவ கல்லூரியும் இணைந்து நட த்திய கோவிட்-19 எதிர்ப்பு மருந்துவ முகாம் மிடாலக்கா ட்டில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, மாவட்ட இணைச் செயலாளர் காஸ்ட்ரோ தலைமை வகி த்தார். கல்லூரி முதல்வர் பிராங்கிளின் முன்னிலையில் பாலப்பள்ளம் பேரூராட்சி முன்னாள் தலைவர் கில்டா ரமணிபாய் முகாமை துவக்கி வைத்தார். மருத்துவர்கள் மற்றும் சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் பொன். சோபனராஜ், சிபிஎம் வட்டா ரச் செயலாளர் சாந்தகுமார், வாலிபர் சங்க வட்டாரச் செய லாளர் றசல்ராஜ், பிரபின், ஜினுகுமார், முருகே சன், ஹரிதாஸ் உட்பட திர ளானோர் பங்கெடுத்தனர்.