tamilnadu

img

கொரோனா நிவாரண அரிசி தரமில்லை... மதுரை ஆட்சியரிடம் புகார்

மதுரை 
கொரோன நிவாரணப் பொருட்களில் ஒன்றான அரிசி வழக்கம்போல் தரமில்லை என இக்கட்டான சூழலிலாவது தரமான அரிசி வழங்கவேண்டுமென மதுரை ஆட்சியரிடம் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் புகாரளித்துள்ளது.

மதுரை அருள்தாஸ்புரம் பகுதியில் உள்ள ஒரு  ரேஷன் கடையில்  வழங்கப்பட்ட கொரோனோ ரேஷன் பொருட்கள் தரமற்ற முறையில்  இருந்துள்ளது. அரிசியில்  வண்டுகள், கற்கள் அதிகமாக இருந்துள்ளது. இதுகுறித்து  வாட்ஸ் அப்பில் ஒரு வீடியோவை பதிவு வெளியாகியுள்ளது. அதில் பேசும் நபர், தான் மதுரையில் பிளாட்பாரத்தில் ஜூஸ் கடை வைத்து பிழைப்பு நடத்தும் தினக்கூலி. எனக்கு மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் உள்ளனர். இதுவரை எங்களிடம் இருந்ததை வைத்து இந்த பத்து நாட்களை எப்படியோ கடத்தி விட்டோம். ஆனால், இனி என்ன செய்யப்போகிறோன் என்று தெரியவில்லை. அரசு கொடுத்த ரேஷன்  அரிசி மிக மோசமாக, சமைக்க முடியாத நிலையில் இருப்பதாக வீடியோவில் காண்பித்தார். யாரேனும் எங்களுக்கு உதவி செய்யுங்கள் என்று உருக்கமாகப் பேசியிருந்தார். இதையடுத்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் உடனடியாக நேரில் சென்று அவர் குடும்பத்திற்கு தேவையான மளிகை சாமான்களை  வழங்கினர்.  மோசமான அரிசி விநியோகப் பிரச்சனையை வாலிபர் சங்க  நிர்வாகிகள் அதிகரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். இதையடுத்து அரிசி சம்பந்தப்பட்ட நபருக்கு மாற்றிக்கொடுக்கப்பட்டது. ரேஷன் கடையில் உள்ள தரமற்ற அரிசியை விநியோகிக்கக்கூடாது.  நல்ல அரிசியை மக்களுக்கு வினியோகிக்க வேண்டுமென்றனர்.
 

;