புதுதில்லி, பிப்.8- நாடாளுமன்ற மாநிலங்களவையில் பிரதமர் நரேந்திர மோடி பேசும் போது, கொரோனா ஒரு உலகளாவிய தொற்று நோய், கடந்த 100 ஆண்டுகளில், மனிதகுலம் இதுபோன்ற சோகத்தை ஒருபோதும் கண்ட தில்லை. கொரோனா பரவல் அதன் வடி வத்தை மாற்றிக்கொண்டிருக்கிறது, உலகம் இன்னும் போராடிக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் என்ன நடக்கும், அது உலகை எப்படிப் பாதிக்கும் என்று மக்கள் நினைத்திருந்தனர். இன்று, இந்தியா மேற்கொண்ட முயற்சிகளை உலகமே பாராட்டுகிறது, இது இந்தியாவின் சாதனை, ஒரு குறிப்பிட்ட கட்சியின் சாதனை அல்ல. கொரோனா காலத்தில் மேற்கொள்ளப் பட்ட பல்வேறு முயற்சிகள் காரணமாக விவ சாயிகள் தொடர்ந்து பயிர்களை விளைவித்த னர். அதே நேரத்தில் வேலைவாய்ப்பை உரு வாக்க அரசாங்கம் பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்களை மேற்கொண்டது.
கொரோனா பரவலின் போது நடந்த விளையாட்டுப் போட்டிகளில் வீரர்கள் விருது களை நாட்டிற்கு பெற்றுக்கொடுத்துள்ளனர். கொரோனா அவர்களின் செயல்திறனையோ வெற்றியையோ பாதிக்கவில்லை. இந்தியா ஒரு தலைமைப் பாத்திரத்தை ஏற்றுள்ளது, உலகம் அதைப் பற்றி பேசுகிறது. கொரோனா பரவல் காலத்தில் 150 நாடுகளுக்கு உதவியுள்ளோம் என்றார். சிறுகுறு தொழில் துறையில் ஏராளமான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டன. விவசாய துறையும் வேலைவாய்ப்புகள் அதிகம்.
அவர்களுக்கு எந்த தடையும் ஏற்படாதவாறு பார்த்துக் கொண்டோம். நேரடிப் பயன் பரிமாற்றத்தின் மூலம் விவசாயிகள் அதிகபட்ச குறைந்தபட்ச ஆதார விலையைப் பெற்றனர். முதன்முறை யாக பஞ்சாபில் உள்ள விவசாயிகள் தங்கள் கணக்குகளில் விளை பொருட்களுக்கான விலையைப் பெற்றுள்ளனர், அவர்கள் முதல் முறையாக தங்கள் கணக்கில் இவ்வளவு தொகையைப் பார்த்தது ஆச்சரியமாக இருந்தது. இப்போது இந்தியா முன்னணி மொபைல் தயாரிப்பாளராக உள்ளது, மேலும் ஏற்றுமதியிலும் முன்னேறி வருகிறோம். சிறு-குறு தொழில் நிறுவனங்களால் தயாரிக்கப் பட்ட பொறியியல் பொருட்கள் தற்போதைய ஏற்றுமதியில் பெரும் பங்களிப்பை வழங்கு கின்றன. 200 கோடிக்கும் குறைவான டெண்டர் இந்தியர்களுக்கு மட்டுமே கிடைக்கும், இது துறையை உயர்த்த உதவும். இந்தியாவிற்கு பிரகாசமான எதிர்காலம் உள்ளது. அதன் மீது அனைவரும் நம்பிக்கை வைக்க வேண்டும் என்றார்.