சென்னை, ஏப். 27- 2020ஆம் ஆண்டுக்குப் பின் விருப்ப ஓய்வு மற்றும் பணியில் இறந்தவர்களின் பணப்பலன் களை உடனே வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் சார்பில் சென்னை பல்லவன் இல்லம் முன்பு புதனன்று (ஏப். 27) இரண்டாவது நாளாக காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இதுகுறித்து தலைவர் எஸ்.கிருஷ்ணன் கூறுகையில், வயதான காலத்தில் முந்தைய அதிமுக ஆட்சியிலும் அலைக் கழிக்கப்பட்டோம், தற்போதைய புதிய அரசும் பிரச்சனைகளுக்கு தீர்வு காணவில்லை. செவ்வா யன்று போக்குவரத்து துறை அமைச்சரை சந்தித்து பேசினோம். அமைச்சர் முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடி க்கை எடுப்பதாக தெரிவித்தார். இதேபோல் பல அமைச்சர்களும், அதிகாரிகளும் வாக்குறுதி அளித்தார்கள். ஆனால் இதுவரை எதுவும் நிறைவேற்றப்படவில்லை என்பதை அமைச்சரிடம் தெரி வித்தோம் எப்போது அறிவிப்பு வருகிறதோ அப்போது காத்தி ருப்பு போராட்டத்தை கைவிடு வோம் என்று அவரிடம் கூறிவிட் டோம். அறிவிப்பு வரும் வரை எங்களது காத்திருப்பு போராட்டம் தொடரும் என்றார். போராட்டத்தில் சங்கத்தின் பொதுச்செயலாளர் கே.கர்சன், பொருளாளர் ஏ.வரதராஜன் துணைப் பொதுச்செயலாளர்கள் பி.செல்வராஜன், ஆர்.தேவராஜ், கே.வீரராகவன், மாநில நிர்வாகி கள் ஜி.ராமச்சந்திரன், ஏ.ரைமண்ட், எம்.சந்திரன், சேதுராமன், சண்முகம், முத்துக்குமார் உள் ளிட்டு மாநிலம் முழுவதிலும் இருந்து 2 ஆயிரத்திற்கும் மேற்பட் டோர் கலந்து கொண்டனர்.