tamilnadu

img

வீராங்கனையிடம் பாலினம் குறித்து விசாரித்த காவல்துறை அதிகாரி தேசிய மாற்றுப் பாலின ஆணையம் கண்டனம்

புதுதில்லி, பிப்.28- மேற்குவங்கத்தில் திங்களன்று நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல்  வாக்குப்பதிவின் போது திரிணா முல் கட்சியினர் வாக்குச்சாவடி களை சூறையாடியதோடு பரவ லாக முறைகேடுகளில் ஈடுபட்டனர்.  திரிணாமுல் காங்கிரசின் வன்முறை  நடவடிக்கைக்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் அரசியல் தலை மைக்குழு கடும் கண்டனம் தெரிவித் துள்ளது. இது தொடர்பாக அரசியல் தலைமைக்குழு திங்களன்று விடுத் துள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது : பிப்ரவரி 27 அன்று மேற்கு வங்கத்தில் 108 நகர்மன்ற உள்ளாட்சி களுக்கு நடந்த தேர்தல் கேலிக் கூத்தாக மாற்றப்பட்டுவிட்டது.

இதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு வன்மையாகக் கண்டிக்கிறது.  திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக் கும் மாநில அரசு நிர்வாகத்துக்கும் இடையே உள்ள நெருக்கம் கார ணமாக பெரும்பான்மையான வாக்காளர்களுக்கு வாக்களிக்கும் உரிமை மறுக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சித் தேர்தல் மோசடித் தேர்தலாக மாற்றப்பட்டுவிட்டது. முறைகேடுகள் பெரிய அளவிற்கு நடைபெற்றுள்ளன. உள்ளாட்சித் தேர்தல் தங்களது கையை மீறி சென்றுவிட்டதாக மாநில தேர்தல் ஆணைய  பிரதிநிதியே ஒப்புக்கொண்டுள்ளார். வேட்பாளர்கள், வாக்குச்சாவடி முகவர்கள் மீது வன்முறை ஏவி விடப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வு கள் ஊடகங்களில் பெரிய அள விற்கு வெளியாகியுள்ளன. திரிணாமுல் தலைமையிலான மாநில அரசு மற்றும் முற்றாக அரசி யல்மயமாக்கப்பட்டுள்ள காவல் துறை ஆகியவற்றின் கீழ் நியாய மான, நேர்மையான தேர்தல் சாத்தியமில்லாத ஒன்று என்பது தெளிவாகிறது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் இந்த வெட்கக்கேடான நட வடிக்கைகள், வன்முறை ஆகிய வற்றிற்கு எதிராக போராடிய வேட்பாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையுள்ள மக்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  தனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறது. திரிணாமுல் காங்கிரசின் எதேச் சதிகாரத் தாக்குதலுக்கு எதிராக வும் ஜனநாயகத்தை பாதுகாப்பதற் காகப் போராடுபவர்களுக்கும் நாடு  முழுவதும் ஜனநாயக உள்ளம் கொண்ட மக்கள் தங்களது ஆதர வையும், ஒற்றுமையையும் தெரி விக்க வேண்டுகிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள் ளது.