புதுதில்லி, பிப். 25- கேரளாவில் மீனவர் ஹரிதாசன் கொலைக்கு அகில இந்திய மீனவர்கள் மற்றும் மீன் பிடித் தொழிலாளர் சம்மேளனம் (AIFFWF) கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஹரிதாசன் (54) பாஜக-ஆர்எஸ்எஸ் குண்டர்களால் கொடூரமாகத் தாக்கப் பட்டு படுகொலை செய்யப்பட்டார். சம்பவத்தன்று வேலை முடிந்து வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தார். அவர் தலச்சேரி, நியூ மாஹே அருகே உள்ள புன்னோலில் உள்ள அவரது வீட்டின் முன் படுகொலை செய்யப் பட்டார். இவரது கொலைக்கு கடும் கண்ட னம் தெரிவித்துள்ள அகில இந்திய மீன வர்கள் மற்றும் மீன்பிடித் தொழிலாளர் சம்மேளனம், “ஹரிதாசன் சிஐடியு உறுப் பினர். மீன்பிடித் தொழிலாளர் கூட்ட மைப்பின் உறுப்பினர். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங் கலைத் தெரிவித்துக்கொள்கிறோம். ஹரிதாசனை கொலை செய்தவர்கள் அனைவருக்கும் கடுமையான தண்ட னை வழங்க வேண்டும்” என வலியுறுத்தி யுள்ளது.