tamilnadu

img

தோழர் ஆர். ராசப்பா படத்திறப்பு

தோழர் ஆர். ராசப்பா  படத்திறப்பு

திருவாரூர்,  ஜூலை 29-  தோழர் ஆர்.ராசப்பாவின் படத்திறப்பு-புகழஞ்சலி திருவாரூர் அருகே உள்ள மேல துறைக்குடியில் உள்ள அவ ரது இல்லத்தில் நடை பெற்றது. படத்திறப்பில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகப் பொதுத் தொழிலாளர் சங்கத் தின் மாநிலப் பொதுச் செய லாளர், ஆர்.புவனேஷ்வரன் தலைமை உரையாற்றினார்.  சிபிஎம் மாநிலக் குழு  உறுப்பினர் ஐ.வி. நாக ராஜன், ராசப்பா படத்தை திறந்து வைத்து புகழஞ்சலி செலுத்தினார்.  மாவட்டச் செயலாளர் டி. முருகையன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.சுந்தரமூர்த்தி ஆகியோர் புகழஞ்சலி உரையாற்றினர்.   சிஐடியு மாவட்டச் செய லாளர் இரா.மாலதி, தலை வர் எம்.கே.என்.அனிபா, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக பொதுத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட தலைவர் கே.எஸ்.ராஜா மற்றும் கே.கே.ஜோதிபாசு உள்ளிட்ட தோழமை சங்கத்தின் நிர்வா கிகள், கலந்து கொண்டனர். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகப் பொதுத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளரும், மறைந்த தோழர் ஆர்.ராசப்பாவின் மகனுமான சி.ஆர். அண்ணாதுரை நன்றி  கூறினார்.