tamilnadu

img

தோழர் பி.கிருஷ்ணப் பிள்ளை 75 ஆம் ஆண்டு நினைவுதினம்

புரட்சிகர கேரளத்தின் சிற்பி தோழர் பி.கிருஷ்ண பிள்ளை. விடுதலைப் போராட்டத்திலும், மகத்தான விவசாயிகள் எழுச்சிகளிலும் வழிகட்டியாய் திகழ்ந்தவர். இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மகத்தான தலைவர்களில் ஒருவர். கேரளாவில் கம்யூனிஸ்ட் இயக்கத்தை உருவாக்கியவர்களில் ஒருவர். தோழர் பி.கிருஷ்ண பிள்ளை அவர்களது 75 ஆம் ஆண்டு நினைவு நாள். ஆகஸ்ட் 19 சனிக்கிழமை கேரளா முழுவதும் எழுச்சியுடன் கடைப்பிடிக்கப்பட்டது. கண்ணார் காட்டில் உள்ள தோழர் கிருஷ்ண பிள்ளை நினைவிடத்திலும் புன்னப்புரா - வயலார் தியாகிகள் நினைவிடத்திலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் எம்.வி.கோவிந்தன் மாஸ்டர் உள்ளிட்ட தலைவர்கள் செவ்வணக்கம் செலுத்தினர்.