திருச்சிராப்பள்ளி, மார்ச் 20- தமிழகத்தில் திமுக தலைமையிலான ‘இந்தியா’ கூட்டணி யில், தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டு, திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் பங்கேற் கும் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் திருச்சி சிறுகனூரில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெறுகிறது. இங்கு திருச்சி, பெரம்பலூர் மக்க ளவைத் தொகுதிகளின் வேட்பாளர் களை அறிமுகம் செய்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தை துவங்குகிறார். மக்களிடையே வாக்கு கள் கேட்டு பேசுகிறார். இந்நிலையில், முதல்வருடன், கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களும் மேடையில் பங்கேற்பர். திருச்சி கூட்டம் மக்களவைத் தேர்தல் வெற்றிக்கான தொடக்கமாக இருக்கும் என்று நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சரும், திமுக முதன்மைச் செயல ருமான கே.என். நேரு தெரிவித்துள்ளார்.