tamilnadu

img

தோழர் ஏ.நல்லசிவன் நினைவேந்தல்

தோழர் ஏ.நல்லசிவன்  நினைவேந்தல்

திருநெல்வேலி, ஜூலை 20-  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  மாநிலச் செயலாளராகவும் சிஐடியு மூத்த தலைவர்களில் ஒருவராகவும் இருந்த தோழர் ஏ.நல்லசிவன்  அவர் களின் நினைவுதினத்தை முன்னிட்டு ஜூலை 20 அன்று மாநிலம் முழுவதும் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.  அவரது பிறந்த ஊரான திருநெல்வேலி மாவட்டம் பிரம்ம தேசத்தில் நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கட்சியின்  ஒன்றியச்செயலாளர் என். சுரேஷ்  தலைமை தாங்கினார்.கட்சியின் மத்தியக்குழு உறுப்பினரும் சிஐடியு அகிலஇந்தியசெயலாளருமான  ஆர்.கருமலையான்  அவரது உருவப்படத்திற்கு மாலையணிவித்து  மரியாதை செலுத்தி, உரையாற்றி னார்.  இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.மோகன்,  அம்பை ஒன்றியக்குழு உறுப்பினர்கள் மற்றும் பலர் பங்கேற்றனர்.