பெய்ஜிங் நகரின் மிகவும் முக்கியமான சாலையான ட்சாங் ஆன் சாலையின் இரு பக்கங்களிலும், குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி தொடர்பான மலர் படுக்கைகள் அண்மையில் அமைக்கப்பட்டன. பெய்ஜிங் 2022ஆம் ஆண்டு குளிர்கால ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் மரபுச் செல்வ அறிக்கைகளின் தொகுப்பு ஜனவரி 19ஆம் நாள் பெய்ஜிங்கில் வெளியிடப்பட்டது. விளையாட்டு, பொருளாதாரம், சமூகம், பண்பாடு, சுற்றுச்சூழல், நகரம், பிரதேச வளர்ச்சி ஆகிய 7 குறியேடு கள் இத்தொகுப்பில் இடம்பெறுகின்றன. 2015ஆம் ஆண்டு குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை நடத்தும் உரிமை பெய்ஜிங்குக்கு கிடைத்தது. அதன் பிறகு, பனி விளையாட்டு பரவல் மற்றும் வளர்ச்சி, பனித் தொழில் களின் வளர்ச்சி மற்றும் புத்தாக்கம், சமூக நாகரிக முன்னேற்றம், இயற்கைச் சூழல் மேம்பாடு, நகரத்தின் உயர்தர வளர்ச்சி உள்ளிட்டவற்றை முன்னேற்றுவதில் இவ்விளையாட்டுப் போட்டிக்கான ஆயத்தப் பணி சாதனைகள் வெளிக்காட்டப்பட்டுள்ளன. தற்போது பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான ஆயத்தப் பணிச் சாதனைகள் நிலவர மரபுச் செல்வங்களாக மாற்றப்பட்டு, முன்கூட்டியே பொது மக்க ளுக்குப் பயனளித்துள்ளன என்று பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் அமைப்புக் குழுவின் மொத்த திட்ட வரைவுப் பிரிவின் துணைத் தலைவர் வாங் ரென்ஹுவா தெரிவித்தார்.