விடுதலைப் போராட்ட வீரரும், அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் தலைவருமான முத்துராமலிங்கத் தேவரின் 116-ஆவது பிறந்தநாள் மற்றும் 61-ஆவது நினைவு நாளையொட்டி, பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் திங்களன்று அஞ்சலி செலுத்தினார். அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, பி. மூர்த்தி, கே.ஆர். பெரியகருப்பன், ஆர்.எஸ். ராஜகண்ணப்பன், பழனிவேல் தியாகராஜன், டி.ஆர்.பி. ராஜா, ஆட்சியர் விஷ்ணுசந்திரன் உள்ளிட்ட பலர் அஞ்சலி நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.