tamilnadu

img

நவ.18 அரசு ஊழியர்கள் கோட்டை நோக்கி பேரணி

மதுரை:
காலிப்பணியிடங்களை நிரப்பவேண்டும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கவேண்டும். கருவூலத்துறையை சீரழிக்க முயற்சிக்கக்கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி  தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம்  சென்னை கோட்டை நோக்கி பேரணி நடத்தவுள்ளது.இது குறித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலப்பொதுச் செயலாளர் ஆ.செல்வம் மதுரையில் வெள்ளியன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

அரசு ஊழியர் கொலை - நஷ்டஈடு
சிவகங்கையில் ஆக்கிரமிப்புகளை அகற்றச் சென்ற வருவாய் கிராம உதவியாளர் ராதாகிருஷ்ணன் சமூக விரோதிகளால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இயடுத்து அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப்பணி வழங்கப்பட்டுள்ளது. இதை வரவேற்கிறோம். ராதாகிருஷ்ணன் குடும்பத்திற்குதமிழக அரசு ரூ.20 லட்சம் நஷ்டஈடு உடன் வழங்க வேண்டும்.தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவர் மு.சுப்பிரமணியம் பணி ஓய்வு நாளில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அதே போல்கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற செவிலியர் போராட்டத்தை ஆதரித்து உரையாற்றச் சென்ற முன்னாள் மாநிலத்துணைத் தலைவர் மு.சுப்பிரமணி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த உத்தரவுகளை திரும்பப் பெறவேண்டும்.

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் கோயம்புத்தூர் மாவட்டத் தலைவர் செந்தில்குமார் உள்ளிட்ட நான்கு பேர்ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் பங்கேற்றதற்காக மாவட்டம் விட்டு மாவட்டம் இடம்மாறுதல் செய்யப்பட்டுள்ளனர். இதையும் திரும்பப்பெற வேண்டும். ஜாக்டோ-ஜியோ போராட்டத்தின் போது வழங்கப்பட்ட 17 (பி)குற்ற குறிப்பாணையை திரும்பப்பெற வேண்டும்.இக்கோரிக்கையை வலியுறுத்தி அக்டோபர் 11-ஆம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் முதல்வரின் கவனத்தை  ஈர்க்கும் வகையில்  ஆர்ப்பாட்டம் நடைபெறும். அதைத் தொடர்ந்துமாவட்ட ஆட்சியரை சந்தித்து பெரும் திரள் முறையீடும் நடத்தப்படும்.தமிழகம் முழுவதும் சுமார் 80 லட்சம் இளைஞர்கள் வேலைவாய்ப்பிற்காக காத்திருக்கும் நிலையில் இளைஞர்களின் லைவாய்ப்பைப் பறிக்கும் அரசாணை 56-ஐ திரும்பப் பெற வேண்டும்.  புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். கடந்த 35 ஆண்டுகளாக சிறப்புக்காலமுறை ஊதியம் பெறும்  சத்துணவு ஊழியர்கள், அங்கன்வாடி, வருவாய் கிராம தவியாளர்கள், ஊர்ப்புற
நூலகர்கள் உள்ளிட்ட சுமார் 3.5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் சிறப்பு காலமுறை ஊதியம் பெற்று வருகின்றனர். இவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கவேண்டும். தமிழகத்தில் காலியாக உள்ள நான்கு லட்சம்காலிப்பணியிடங்களை ரப்பவேண்டுமென்பன உள்ளிட்ட  கோரிக்கைகளை வலியுறுத்தி நவம்பர் 11-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை வாகனப்பிரச்சாரம் தமிழகத்தின்  நான்கு முனைகளிலிருந்து  நடைபெறுகிறது. இது களியக்காவிளை, இராமேஸ்வரம், வேதாரண்யம், ஓசூர் ஆகிய நகரங்களிலிருந்து புறப்படும். பிரச்சாரத்தின் நிறைவில் நவம்பர் 18-ஆம் தேதி கோட்டை நோக்கி பேரணி நடைபெறும் என்றார்.

கருவூலத்துறை சீரழிப்பு?
தமிழக அரசு கருவூலத்துறையை சீரழிக்கும்முயற்சியை கைவிட வேண்டும். ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்டம் என்ற பெயரில் துறையை கணினிமயமாக்க விப்ரோ என்ற தனியார் நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்துள்ளது. முதற்கட்டமாக கன்னியாகுமரி, தேனி, சென்னை,மதுரை, கரூர், சேலம்,அரியலூர் ஆகிய நகரங்களில் பரீட்சார்த்தமாக இறங்கியுள்ளது. உள்கட்டமைப்பு வசதி, மேம்பாடு,   போதிய பயிற்சி இல்லாமல் தொடர்ந்து அரசு தோல்வியைச் சந்தித்து வருகிறது. விப்ரோ தனியார்நிறுவனம் கருவூலத்துறையில் நுழைந்தால் 5,400 பணியிடங்கள் 900 ஆகக் குறையும்.விப்ரோ நிறுவனத்தை அரசு அனுமதிக்கக்கூடாது, கருவூலத்துறையில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும்.அரசு ஊழியர்கள் தங்களது கோரிக்கைகளுக்காக தொடர்ந்து போராடினாலும் மக்கள் நலத் திட்டங்களைக் கொண்டு சேர்ப்பதில் தொய்வின்றி பணியாற்றி வருகின்றனர். தூய்மை இந்தியா திட்டம், சுகாதாரத் திட்டங்களை அமலாக்குவதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. இதற்கான விருதுகளை அமைச்சர்கள் பெற்றுள்ளனர். இதற்குக் காரணம் அரசு ஊழியர்கள் தான்.

இளைஞர்களுக்கு வேலை வழங்குக
உதாரணத்திற்கு பிரேசிலில் ஆயிரம் பேருக்கு 111 அரசு ஊழியர்கள் உள்ளனர். சீனாவில் ஆயிரம் பேருக்கு 57 அரசு ஊழியர்கள் உள்ளனர். ஆனால், 8 கோடி மக்கள் தொகைகொண்ட தமிழகத்தில் ஆயிரம் பேருக்கு 16 அரசுஊழியர்களே பணியில் உள்ளனர். தமிழகத்தில் காலியாக உள்ள அரசுப் பணியிடங்களில் இளைஞர்களை நியமிக்க வேண்டும். அரசு ஊழியர்கள்-ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். வேலை நிறுத்த காலத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டுமென ஜாக்டோ-ஜியோ சார்பில் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், ஆர்.பி.உதயகுமார் ஆகியோரை கடந்த 23.9.2019 அன்று சந்தித்து முறையிட்டோம். பரிசீலிப்பதாகக் கூறினார்கள். ஆனால் இதுவரை ஒன்றும் நடைபெறவில்லை. எனவே தமிழக முதல்வர் கோரிக்கைகள் குறித்து நேரடியாக பேச்சுவார்த்தை நடத்திதீர்வுகாண வேண்டும்.பேட்டியின் போது மதுரை மாவட்டச் செயலாளர் க.நீதிராஜா, இரா.தமிழ், மகேந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.
 

;