100 நாள் வேலை திட்டத்தை நகர் பகுதியிலும் விரிவுபடுத்திடுக!
ஸ்ரீவில்லிபுத்தூர், அக்.3- உடலுழைப்பு தொழிலா ளர் சங்கத்தின் திருவில்லி புத்தூர் நகர் மாநாடு சரண்யா தலைமையில் நடைபெற் றது. மாநாட்டை உடலு ழைப்பு தொழிலாளர் சங்கத் தின் மாவட்டத் தலைவர் சந்தனம் துவக்கி வைத்தார். சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் பிச்சைக் கனி வாழ்த்திப் பேசினார். மாநாட்டை நிறைவு செய்து உடலுழைப்பு தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட பொதுச் செயலாளர் எம்.மகாலட்சுமி பேசினார். மாநாட்டில் புதிய நிர்வா கிகள் தேர்வு செய்யப்பட்ட னர். தலைவராக ஆர்.சரண்யா, செயலாளராக பி.ரமேஷ், பொருளாளராக கே.சந்தனமாரி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். 100 நாள் வேலைத்திட் டத்தை நகர் பகுதியிலும் விரிவுபடுத்த வேண்டும். திருவில்லிபுத்தூர் நகர் பகுதியில் அம்மா உண வகம் உள்ளது. மக்கள் தொகை அதிகமாக இருப்ப தால் கூடுதலாக அம்மா உண வகம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.
