tamilnadu

img

அக்.14,15 தேதிகளில் காஞ்சிபுரத்தில் மாநில மாநாடு

கோவை, ஆக.30- காஞ்சிபுரம் மாவட்டத்தில் அக். 14,15 ஆகிய தேதிகளில் மாநில மாநாடு நடைபெற உள்ளதாக சிஐடியு கைத்தறி நெசவுத் தொழிலாளர் சம்மேளனம் அறி வித்துள்ளது. சிஐடியு தமிழ்நாடு கைத்தறி நெசவுத்தொழிலாளர் சம்மேளன மாநிலக்குழு கூட்டம் மேட்டுப் பாளையத்தில் செவ்வாயன்று நடைபெற்றது. மாநிலத் தலைவர் ஆர்.சிங்காரவேலு தலைமை வகித்தார். கோவை மாவட்டச் செயலாளர் இ.என்.ராஜகோபால், மாவட்டத் தலைவர் பி.பரமேஸ்வ ரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநிலச் செயலாளர் இ.முத்துக்குமார், கைத்தறி நெசவுத்தொழில் தற்கால நிலை  மற்றும் ஒன்றிய, மாநில அரசு களிடம் கோரிக்கை வைத்து நடை பெறுகிற பல்வேறு இயக்கங்கள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். அக்.2ல் பெரும் போராட்டம் இக்கூட்டத்தில், கைத்தறி நெசவாளர்களின் நீண்ட நாள்  கோரிக்கைகளான ரக ஒதுக்கீடு சட்டத்தை உறுதியாக அமல்படுத்த வேண்டும். ஆண்டுக்கு ஒரு முறை இயற்கை சீற்ற நிவாரணம் மற்றும் பென்சன் தொகை ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். கைத்தறி ஆடைகளுக்கு ஜிஎஸ்டி விலக்கு அளிக்க வேண்டும். தனி  நலவாரியம் அமைக்க வேண்டும். கூட்டுறவு சங்க தேர்தல் நடத்த வேண்டும். சங்க உறுப்பினர்கள் அனைவரும் வாக்களிக்கும் உரிமை வழங்க வேண்டும். கைத்தறி நெசவுத் தொழிலா ளர்களுக்கு, அனைவருக்கும் வீடு திட்டத்தில், வீட்டுமனையுடன் வீடு கட்டித்தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அக்.2 ஆம் தேதியன்று மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என கூட்டத்தில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.

மாநில மாநாடு

இதைத்தொடர்ந்து சம்மேள னத்தின் தமிழ் மாநில மாநாடு அக்டோபர் 14, 15 ஆகிய தேதி களில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடத்துவது எனவும் முடிவு செய்யப் பட்டது. முடிவில், சங்கத்தின் கோவை மாவட்டப் பொருளாளர் டி.ஆர்.ராமசாமி நன்றி கூறினார். இதில், சம்மேளன நிர்வாகிகள், சிஐடியு கோவை மாவட்டப் பொருளாளர் ஆர்.வேலுச்சாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.