tamilnadu

img

2 ஆண்டுகளுக்கு பிறகு பள்ளிகளுக்கு சென்ற குழந்தைகள்

சென்னை,பிப்.16- தமிழ்நாட்டில் கொரோனா தொற்று காரணமாக 2020 ஆம் ஆண்டு மார்ச் மாத இறுதி யில் பள்ளிகள் மூடப்பட்டன. அதன் பின்னர் உயர்நிலை மேல்நிலை பள்ளிகள் திறக்கப் பட்டன. ஆனால் பிரிகேஜி., எல்கே ஜி., யுகேஜி மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்காமல் இருந்தன. இந்த நிலையில் மழலையர் பள்ளிகளை திறக்க வேண்டும் என்ற கோரிக் கையை ஏற்று பிப்ரவரி 16 ஆம் தேதி முதல் பள்ளி களை திறக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் மாநிலம் முழுவதும் நர்சரி பள்ளிகள் திறக்கப்பட்டன. குழந்தைகள் பள்ளிக ளுக்கு எப்போது செல்வார்கள் என்ற எதிர்பார்ப்பில் இருந்த பெற்றோர்களுக்கு இந்த அறிவிப்பு மகிழ்ச்சியை அளித்தது. 2 ஆண்டுகளாக குழந்தைகளின் படிப்பு வீணானதை எண்ணி கவலை அடைந்த பெற்றோர்கள் குழந்தைகளை உற்சாகமாக பள்ளிகளுக்கு அனுப்பி வைத்தார்கள். இந்த ஆண்டு பிரிகேஜி சேர்ந்த குழந்தைகள் மற்றும் ஏற்கனவே எல்.கே.ஜி., யு.கே.ஜி. படித்து வரும் குழந்தைகள் அனைவரும் பள்ளிகளுக்கு சென்றனர்.

குழந்தைகளை காலையிலேயே தயார்படுத்தி புத்தக பையுடன் உணவையும் பெற்றோர்கள் கையில் எடுத்து சென்றனர். நீண்ட கால இடைவெளிக்கு பிறகு குழந்தைகள் பள்ளிக்கு செல்வதால் முரண்டு பிடிக்கக் கூடிய வாய்ப்பு இருந்ததால் அவர்களை பெற்றோர்கள் பாச மழை பொழிந்து பள்ளிகளுக்கு அழைத்து சென்றனர். முதன்முதலாக பள்ளி வாசலில் கால்வைத்த குழந்தை கள் ஒருவித புதிய சூழ்நிலையை கண்டு மகிழ்ச்சி யடைந்தனர். பள்ளிக்கு வந்த குழந்தைகளை ஆசிரியைகள் அன்போடு வரவேற்று அழைத்து சென்றனர். சென்னை மாநக ராட்சி பள்ளிகளில் குழந்தை களை வரவேற்க விதவிதமான ஏற்பாடுகள் செய்யப்பட்டி ருந்தன. தனியார் பள்ளிகளிலும் குழந்தைகளை கவர வித்தியாசமான அணுகுமுறை களை கையாண்டார்கள்.

நீண்ட நாட்களுக்கு பிறகு குழந்தைகள் பள்ளிக்கு வரும் சூழ்நிலையில் அழும் என்பதால் அவர்களை சமாதானப்படுத்தும் வகையில் ‘மிக்கிமவுஸ்’ வேடம் அணிந்து குழந்தைகளை உயர் வகுப்பு மாணவர்கள் வரவேற்றனர். குழந்தைகளுக்கு மிக்கிம வுஸ் கை கொடுத்து வரவேற்ற தோடு இனிப்பு வழங்கினர். முதல்நாள் என்பதால் குழந்தைகளுக்கு அரை  நாள் மட்டுமே வகுப்புகள் நடைபெற்றன. பெரும்பாலான பள்ளிகளில் பெற்றோர்கள் குழந்தைகளை விட்டு விட்டு வீடுகளுக்கு செல்லா மல் வெளியேயே அமர்ந்திருந் தனர். 3 மணி நேரம் எப்படி குழந்தைகள் இருப்பார்கள்? என்ற மன நிலையில் ஒவ் வொரு பெற்றோரும் கவலை யுடன் பள்ளி வாசல் முன்பு காத்து நின்றனர். மதியம் 12  மணிக்கு வகுப்புகள் முடிந்த வுடன் பெற்றோர்கள் ஓடிச் சென்று தங்கள் குழந்தைகளை கையில் தூக்கி முத்தமிட்டு மகிழ்ந்தனர்.