tamilnadu

img

‘ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ்’ குழந்தைகளை பாராட்டிய முதல்வர்!

சென்னை,பிப்.24- சமூதாய விழிப்புணர்வு குறித்து நடத்தப்பட்ட தந்தை பெரியார் மற்றும் குறவன் குறத்தி நாடகத்தில் பங்கேற்ற சிறுவர், சிறுமியர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர். ‘ஜீ’ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குழந்தைகள் பங்கேற்கும் ‘ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ்’ நிகழ்ச்சியில், தந்தை பெரியார் கெட்டப்பில் சிறுவர்கள் ஃபர்மாமென்ஸ் செய்து நடித்துக் காட்டினர். அப்போது பெரியார் கருத்தை நாடக வடிவிக் கையில் எடுத்திருந்த சிறுவர்கள், பெண் விடுதலை, பெரியார் ஏன் கடவுளை எதிர்த்தார்? மதத்தை தூக்கி யெறியச் சொல்லியது ஏன்? என்ற கேள்விகளுக்கு பதில் அளிக்கும் விதமாக பேசிய காட்சிகள் தமிழ் நாட்டு மக்களின் நெஞ்சங்களில் பதியும் வண்ண மாக அமைந்திருந்தது. குறிப்பாக, பெரியாரின் வேடமணிந்திருந்த சிறுவன், “கடவுள் மறுப்பு என்பது என்னுடைய கொள் கையே இல்லை. எல்லோரை யும் சமமா நடத்தனும்ங் கிறது மட்டும் தான் என்னோட எண்ணம்”போன்ற வசனங்களையும், பெண் அடிமைத் தனத்தை ஒழிக்க பெரியாரின் கொள்கைகளை எடுத்துரைத்து பேசியிருந்தனர்.